(Reading time: 3 - 6 minutes)

அழகு குறிப்புகள் # 53 - ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை குறைப்பது எப்படி?

ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் என்பது நம் சருமத்தில் தோன்றும் நீண்ட கோடுகள் ஆகும். குறிப்பாக எடை அதிகரிப்பு காரணமாக நம் தோல் நீட்டப்படும் போது இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் தோன்றும். இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் யாருக்கு வேண்டுமென்றாலும் வரும் ஆனாலும், ஆண்களை விட பெண்களுக்கு ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் அதிகமாக உள்ளன. வயிற்றில் இருந்து தொடைகள், மார்பகம் மற்றும் கைகள் வரை, உடலின் வெவ்வேறு பாகங்களில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் தோன்றும்.

 

ஸ்ட்ரெட்ச் மார்க்குகளிலிருந்து விடுபட, நீங்கள் விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். விளக்கெண்ணெய் ரிசினோலிக் அமிலம் எனப்படும் நிறைவுறா ஒமேகா -9 கொழுப்பு அமிலத்தைக் கொண்டுள்ளது. இந்த அமிலம் தோலுக்கு ஈரப்பதமூட்டும் மற்றும் கண்டிஷனிங் பண்புகளைக் கொண்டுள்ளது. அதனால் விளக்கெண்ணெய் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை குறைக்கக்கூடும். ஸ்ட்ரெட்ச் மார்க்குகளில் இருந்து விடுப்பட விளக்கெண்ணெய்யை எப்படி பயன்படுத்துவது என்பதை இங்கே பார்ப்போம்.

  

விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்

மருத்துவ இதழில் வெளியான ஒரு ஆய்வின்படி, தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் மற்றும் சருமத்தை சரி செய்ய வல்லது. எனவே இது ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் தோன்றுவதை குறைக்கக்கூடும்.

விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயைப் ஒரு பாத்திரத்தில் நன்கு கலந்து லேசாக சூடாக்கவும்.

இப்போது, ​​ ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் இருக்கும் பகுதிகளில் எண்ணெய் கலவையைப் பயன்படுத்தி மசாஜ் செய்யவும். அதை அப்படியே இரவு முழுக்க விட்டு விடுங்கள்.

ஒவ்வொரு நாளும் இதைச் செய்வது நீங்கள் விரும்பிய முடிவைக் கொடுக்கும்.

 

விளக்கெண்ணெய் மற்றும் கிராம்பு எண்ணெய் (Clove Essential Oil)

வலுவான திசு மறுவடிவமைப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதால், கிராம்பு எண்ணெய் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைக் குறைக்கும்.

ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் 3 சொட்டு கிராம்பு எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேருங்கள். இப்போது, ​​அதை நன்கு கலந்து, ஸ்ட்ரெட்ச் மார்க் இருக்கும் பகுதியில் மசாஜ் செய்ய பயன்படுத்தவும்.

அதை அப்படியே இரவு முழுக்க விட்டு விடுங்கள். இதை தினமும் செய்யவும்.

 

விளக்கெண்ணெய் மற்றும் கற்றாழை

கற்றாழை இயற்கையாக ஃபைப்ரோபிளாஸ்ட்களைத் (fibroblasts) தூண்டி, நம் உடலுக்கு கட்டமைப்பை கொடுக்கும் கொலாஜன் உற்பத்தி ஆக உதவக் கூடியது. மேலும், கற்றாழை ஈரப்பதமூட்டும் தன்மையையும் கொண்டுள்ளது.

தினமும் இதைப் பயன்படுத்துவதால் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைக் குறைக்கலாம்.

1 டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெய்யை நன்கு கலக்கவும். அந்த கலவையை பயன்படுத்தி 10 நிமிடங்கள் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் இருக்கும் பகுதிகளில் மசாஜ் செய்யவும். அதை அப்படியே இரவு முழுக்க விட்டு விடுங்கள். இதை தினமும் செய்யவும்.

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.