(Reading time: 3 - 5 minutes)

அழகு குறிப்புகள் # 54 - வருண்ட சருமத்திற்கான தீர்வு

கோடைக்காலம், குளிர்க்காலம் என்ற பாகுபாடு இல்லாமல் நம்மில் பலரும் முகத்தில் இருக்கும் வருண்ட சருமத்தினால் பாதிக்கப் பட்டு இருக்கிறோம்.

இதை இயற்கையாக சரி செய்ய இதோ சில வழிமுறைகள்.

 

1. பட்டை மற்றும் தேன் மாஸ்க்

தேன் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் பட்டை அழுக்கை பிரித்தெடுக்கிறது மற்றும் ரத்த நாள சுழற்சியை மேம்படுத்துகிறது.

இந்த் மாஸ்க் செய்ய உங்களுக்கு தேவையானது 2 டேபிள்ஸ்பூன் தேன் + ½ டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள். இரண்டையும் ஒன்றாக கலந்து உங்கள் முகத்தில் மெல்ல தடவவும்.

அப்படியே 15-20 நிமிடங்கள் வைத்து, மென்மையாக விரல்களால் மசாஜ் செய்து அகற்றவும்.

5 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து செய்வது, நல்ல பல்னக்ளை தரும்.

  

2. தேங்காய் எண்ணெய் மசாஜ்

உலர்ந்த சருமம் என்பது உங்கள் சருமத்தில் கொழுப்பு அமிலங்கள் குறைவதால் ஏற்படுகிறது. உங்கள் சருமம் இழந்த கொழுப்பு அமிலங்களை மீண்டும் பெற தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த ஆதாரம்.

உங்கள் முகத்தை நன்கு கழுவி, ஒரு டேபிள்ஸ்பூன் ஆர்கானிக் தூய தேங்காய் எண்ணெயுடன் 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அதை அப்படியே இரவில் விட்டு விடுங்கள்.

உங்கள் சருமம் தேங்காய் எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளும். அதனால் சருமத்தின் அமைப்பு மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

  

3. கற்றாழை

அலோ வேரா பற்றி எல்லோருக்கும் தெரியும்.இது சரும அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் கொலாஜன், எலாஸ்டின் அளவையும் மேம்படுத்துகிறது.

ஒரு கற்றாழை இலையில் இருந்து ஜெல் எடுத்து, உங்கள் முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். அப்படியே இரவு முழுக்க விட்டு விடுங்கள். தொடர்ந்து செய்து வந்தால் நல்ல வேறுபாடைக் காணலாம்.

  

4. கிளிசரின்

கிளிசரினில் இருக்கும் ஹுமெக்டான்ட்கள் மற்றும் எமோலியண்ட் ஆகியவை உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குவதில் சிறப்பானவை உங்களுக்கு தேவையானது 1 டீஸ்பூன் கிளிசரின் மட்டுமே.

உலர்ந்த சருமம் இருக்கும் இடங்களில் க்ளிசரினை தடவி, சில மணி நேரம் விட்டுவிட்டு கழுவவும்.

 

5. பால் பவுடர் ஃபேஸ் பேக்

பால் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது மற்றும் நல்ல மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.

2 டீஸ்பூன் பால் பவுடர் + ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் + 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். வறண்ட சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட் தாங்க உலர்ந்த உடன் தண்ணீரால் கழுவி விடுங்கள். வாரத்திற்கு இரண்டு முறையாவது இதை தொடர்ந்து செய்யுங்கள்.

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.