(Reading time: 5 - 9 minutes)

இது முகப்பரு வடுக்களை குறைக்க உதவுகிறது.

அதிக சக்தி தேவை என்றால் பாலுக்கு பதில் எலுமிச்சை சாறை பயன்படுத்துங்கள்.

  

வெயிலினால் சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை குறைக்க

4 டீஸ்பூன் கடலை மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள், 1 டீஸ்பூன் தயிரை எலுமிச்சை சாறுடன் கலக்கவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நிற மாற்றத்தைக் குறைக்கும். அதே நேரத்தில் தயிர் சருமத்தை ஈரப்பதமாக்கும்.

தினமும் பேஸ்ட்டை சருமம் மற்றும் முகத்தில் தடவவும். தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல முடிவுகளைப் பார்ப்பீர்கள்.

 

தயிருக்கு பதிலாக பாலையும் சேர்க்கலாம். முகத்திற்கு மட்டும் என்று இல்லாமல், உங்கள் உடலெங்கும் இந்த பேஸ்டைப் பயன்படுத்தி இயற்கை முறையில் அழகான சருமத்தைப் பெறலாம்.

  

சருமத்தில் இருக்கும் அதிக எண்ணெயைக் குறைக்க

ஒன்று:

இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவு எடுத்து அதில் பன்னீர் சேர்க்கவும். இந்த கலவை மென்மையான பேஸ்டாக மாறும் வரை பன்னீர் சேர்க்கவும்.

உங்கள் முகத்திலும் கழுத்திலும் தடவி, 20 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.

பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

 

இரண்டு:

2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சிறிது தண்ணீர் கலந்து ஒரு தடிமனான பேஸ்ட் தயாரிக்கவும்

இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் மெதுவாக தடவவும்.

20 நிமிடங்கள் காத்திருந்து கழுவவும்.

இதை வாரத்திற்கு மூன்று முறையாவது செய்யுங்கள்.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.