(Reading time: 2 - 4 minutes)

அழகு குறிப்புகள் # 79 - உங்களுக்கு ஏற்ற லிப்ஸ்டிக் நிறத்தை தேர்வு செய்வது எப்படி?

லிப்ஸ்டிக்கில் அழகாக தெரிவதற்கு மிகவும் முக்கியமான விஷயம் உங்கள் சருமத்திற்கு ஏற்ற சரியான லிப்ஸ்டிக் நிறத்தைத் தேர்ந்தெடுப்பதாகும்.

உங்களுக்கு ஏற்ற லிப்ஸ்டிக்கை நீங்க தேர்ந்தெடுக்க பயன்படுத்தக்கூடிய சில உதவிக்குறிப்புகளை இதோ:

 

உங்கள் சருமத்தின் தொனியை அறிந்துக் கொள்ளுங்கள்

உங்களுக்கு ஏற்ற மேக்கப் சாதனம் எதையும் வாங்கும் முன்பு உங்கள் சருமத்தின் தொனி (undertone) என்னவென்று தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

பொதுவாக சரும தொனிகள் குளிர்ச்சி, சூடு, நடுநிலை என மூன்று வகைப் படுத்தப் பட்டிருக்கிறது.

உங்கள் சருமத் தொனி என்ன என்பதை கண்டுப்பிடிக்க ஈசியான வழி ஒன்று இருக்கிறது. அது உங்களின் நரம்புகளின் நிறத்தை சார்ந்த சோதனை.

பச்சை நிறமாக இருக்கும் நரம்புகள் இருந்தால், உங்களுடையது சூடான தொனி. நீல நிறமாக இருக்கும் நரம்புகள் இருந்தால், குளிர் தொனி. நீல-பச்சை நரம்புகள் இருந்தால் நடுநிலை தொனி.

உங்கள் சருமத்தின் தொனியை தீர்மானிக்கும் போது இயற்கை ஒளியின் கீழ் உங்கள் தோலைப் பாருங்கள்.

 

விரல் நுனி பயன்படுத்துங்கள்

பொதுவாக லிப்ஸ்டிக் தேர்வு செய்யும் போது பலரும் தங்களின் கையின் பின்புறம் அதை பயன்படுத்தி பார்த்து வாங்குவார்கள். ஆனால் அதை விட விரல் நுனியை பயன்படுத்துவதே சிறந்தது. கையின் பின்புறத்தில் உள்ள நிறம் உங்கள் உதடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. விரல் நுனிகள் உதடுகளின் நிறத்தை நெருக்கமாக ஒத்து இருக்கிறது.

எனவே அடுத்த முறை லிப்ஸ்டிக் வாங்கும் போது விரல் நுனியில் அதை பூசவும். பின்னர் அதை உங்கள் முகத்திற்கு எதிராக வைத்துப் பார்த்து தேர்வு செய்யவும்.

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.