(Reading time: 2 - 4 minutes)

அழகு குறிப்புகள் # 80 - தேவையற்ற முடிகளை அகற்றும் லேசர் வழிமுறை

முகத்தில், உடலில் இருக்கும் தேவையற்ற முடிகள் என்பது பலப் பெண்களுக்கும் இருக்கும் சங்கடமான ஒரு பிரச்சனை.

 

இதற்கு நேரடியான சிறந்த வழி எதுவும் இன்னும் கண்டுப்பிடிக்கப் படவில்லை.

 

ஷேவிங், வேக்ஸிங் போன்ற வழிமுறைகள் இருந்தாலும் அதை தொடர்ந்து செய்ய வேண்டும், வலியை தாங்க வேண்டும் போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன.

 

அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட 100% நிரந்தர முடி அகற்றும் வழி இல்லை என்றாலும், இப்போது பிரபலமாகி வரும் லேசர் முடி அகற்றும் முறை நிரந்தர முடிவுகளை அளிக்க கூடியது என்று சில மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

  

லேசர் முடி குறைப்பு முறை என்பது லேசர் ஒளி பயன்படுத்தி முடிக்கால்களை (hair follicle) அழிக்கும் முறை.

 

இந்த லேசர் முறை வலி இல்லாத முடி அகற்றும் வழிமுறை என்பது குறிப்பிடத்தக்கது

 

லேசர் முடி குறைப்பு மேல் உதடு, கன்னம், பக்கவாட்டுகள் மற்றும் பிகினி லைன் உட்பட கிட்டத்தட்ட அனைத்து உடல் பாகங்களிலும் வேலை செய்கிறது. அடர்த்தியான முடி வளர்ச்சி இருக்கும் இடத்தில் லேசர் முறை சிறப்பாக இருக்கும். கால்கள் மற்றும் கைகளில் உள்ள முடிகளையும் இந்த முறை மூலம் எளிதாக சிகிச்சையளிக்க முடியும்.

  

ஆனால், லேசர் முடி குறைப்பு முறையை ஒரே ஒரு முறை செய்வதால் பெரிய பலன் எதிர்பார்க்க முடியாது. பல மாதங்களில், பல முறை செய்ய வேண்டியது. ஆனால் நீண்ட கால முடிவுகளை அளிக்க கூடியது. இதன் விளைவாக முடி வளர்ச்சி மென்மையாகவும் இலகுவாகவும் இருக்கும்.

 

யிற்சி பெற்ற நிபுணர்களால் செய்யப் படுவதால் லேசர் வழிமுறைக்கு ஆகும் செலவு அதிகம்.

நல்ல தோல் மருத்துவரை அணுகி இந்த் வழிமுறை உங்களுக்கு உதவுமா என தெரிந்துக் கொள்ளுங்கள்.

  

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.