(Reading time: 2 - 4 minutes)

அழகு குறிப்புகள் # 81 - நிறம் மாறி இருக்கும் உதடுகளை சரி செய்ய இயற்கை வழிகள்

ளம் சிவப்பாய் இருக்க வேண்டிய உதடுகள் நிறம் மாறி இருப்பதற்கு பெரும்பாலும் தவறான உணவும் அதிக சூரிய கதிர்களும் தான் காரணம்.

அதை சீர் செய்ய, சில இயற்கை வழிமுறைகள் இங்கே:

 

தேன்

தேனில் இருக்கும் மெக்னீசியம் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் உதடுகளின் நிறமாற்றத்தைத் தடுக்கக்கூடிய நல்ல பொருட்கள்.

உங்கள் உதடுகளில் தேனைத் தடவி அப்படியே இரவு முழுக்க விட்டு வைக்கலாம்.

அல்லது தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்பூன் தேனைப் பருகலாம்.

இது தெளிவான உதடுகளை கொடுக்கும். உங்கள் உதடுகள் ஆரோக்கியத்துடன் ஒளிரும்.

 

தக்காளி

தக்காளியில் செலினியம் நிறைந்துள்ளது. இது உங்கள் உதடுகளை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சருமத்தையும் சூரிய பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும்.

தக்காளிகளை அப்படியே சாப்பிடலாம்.

அல்லது வெயிலில் இருந்து வந்த உடனே தக்காளியை பேஸ்ட் ஆக்கி உங்கள் உதடுகளில் தடவிக் கொள்ளலாம்.

 

தேங்காய்

இளநீராக குடித்தாலும், சமையலில் பயன்படுத்தினாலும், அப்படியே தேங்காயாக சாப்பிட்டாலும், தேங்காய் அளிக்கும் சரும நன்மைகள் அநேகம்.

இது உங்கள் உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

மென்மையான உதடுகள் கிடைக்க அதில் தேங்காய் எண்ணெயை தடவுங்கள்.

 

பீட்ரூட்

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பீட்ரூட்டால் உங்கள் சருமம் மற்றும் உதடுகளுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும், வயதான அறிகுறிகளைக் குறைக்கும், நிறமாற்றத்தை தடுக்கும் மற்றும் சரும தொனியைக் சமச்சீராக்க உதவும்.

பீட்ரூட் சாறு உதடுகளை சுத்தப்படுத்தி, ஒளிரச் செய்யும்.

 

தர்பூசணி

உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாக, அழகாக இருக்க உங்களால் முடிந்த அளவு பழங்களை சாப்பிடுங்கள்.

வயதாகும்போது நம் சருமம் வறண்டு போகும். அதனால் அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தர்பூசணி பழம் 97 சதவீத நீரால் ஆனது. அதனால் சருமத்திற்கும், உதட்டிற்கும் ஈரப்பதம் கொடுக்கும்.

  

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.