(Reading time: 2 - 4 minutes)

அழகு குறிப்புகள் # 82 - வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி விரல்கள், கை முட்டி ஆகியவற்றில் உள்ள சுருக்கங்களை நீக்குவது எப்படி?

ஈரப்பதமாக்குங்கள்

வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலக்குங்கள்.

 

அந்த தண்ணீரில் உங்கள் கைகளை முப்பது வினாடிகள் ஊற வையுங்கள்.

பேக்கிங் சோடா உங்கள் சருமத்தை மென்மையாக்கும். மேலும் உங்கள் கைகளின் சருமத் துளைகளைத் திறந்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு அதை தயார் செய்யும்.

 

அடுத்து, எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கைகளில் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். இது உங்கள் கைகளுக்கு ஈரப்பததை கொடுத்து அழகாக்கும்.

 

சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் மாஸ்க்

ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்குங்கள்.

வெயிலினால் சருமம் கறுத்து இருந்தால் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாரும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

உங்கள் கைகளை வெதுவெதுப்பான நீரில் நனைத்துக் கொள்ளுங்கள்.

 

அதில் ஆலிவ் எண்ணெய் சர்க்கரை கலவையை நன்றாக தேயுங்கள்.

 

இது உங்கள் கைகளில் இருக்கும் இறந்த செல்களை விலக்கும் (சர்க்கரை), கூடுதலாக ஈரப்பதத்தையும் கொடுக்கும் (ஆலிவ் எண்ணெய்).

 

அரிசி தண்ணீர்

சிறிது அரிசியை தண்ணீரில் ஊறவையுங்கள்.

 

அதில் உங்கள் கைகளை விட்டு சில நிமிடங்கள் ஊற வையுங்கள்

 

பின் கைகளுக்கு ஈரப்பதம் கொடுக்க மாய்ஸ்சரைசர் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.

 

மசாஜ்

உங்கள் கைகளையும் விரல்களையும் மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தையும் கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்க உதவும். விரலில் இருக்கும் சுருக்கங்களை வேகமாக நீக்கவும் உதவும்.

 

எண்ணெய் அல்லது லோஷன் பயன்படுத்தி உங்கள் கைகளையும் விரல்களையும் மசாஜ் செய்வது எளிதானது.

 

மணிக்கட்டில் இருந்து தொடங்கி முழு விரலையும் மசாஜ் செய்ய குறைந்தது ஐந்து நிமிடங்கள் செலவிடுங்கள்.

 

உங்கள் விரல்களின் அடிப்பகுதியை மசாஜ் செய்து, பின் கை முட்டியை மசாஜ் செய்யுங்கள்.

 

அடுத்து, உங்கள் விரல்களை ஒன்றாக வைத்து, அவற்றை முன்னும் பின்னுமாக அசைக்கவும். இது கை முட்டி சுருக்கங்களை வேகமாக அகற்ற உதவும்.

  

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.