(Reading time: 2 - 3 minutes)

அழகு குறிப்புகள் # 83 - கைகள், விரல்களில் சுருக்கங்கள் வராமல் தடுக்க சில குறிப்புகள்

கைகளை கழுவிய பின், ஈரப்பதமாக்குங்கள்:

இன்றைய சூழலில் அடிக்கடி கை கழுவுவது அவசியம் ஆகிறது.

ஆனால் கிருமிகளிடம் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கைகளை கழுவும் போது, நம் சருமத்தில் இருந்து எண்ணெய்களையும் ஈரப்பதத்தையும் இழக்கிறோம்.

எனவே நம் கைகளின் நலத்திற்காக அவ்வப்போது மாய்சரைசர் அல்லது ஆலிவ் எண்ணெய் / தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி கைகளை ஈரப்பதமாக வைத்திருப்பது முக்கியம்.

 

வெயிலில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்கவும்:

கை என்று இல்லாமல் பொதுவாகவே, நம் சருமம் ஆரோக்கியமாக இருக்க, தேவை இல்லாமல் சூரியனின் கதிர்வீச்சு நம் மேல் படாமல் தவிர்ப்பது நல்லது.

எனவே முடிந்த அளவு வெயிலில் செல்வதை தவிர்க்கப் பாருங்கள்.

 

க்ளவ்ஸ் அணியுங்கள்:

கடுமையான இரசாயனங்கள், வீட்டை சுத்திகரிக்கும் பொருட்கள், டிடர்ஜன்ட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது கிளவ்ஸ் அணியுங்கள்

  

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.