(Reading time: 6 - 11 minutes)

அழகு குறிப்புகள் # 84 - மேக்கப் இல்லாமல் இயற்கையாகவே அழகான கண்களைப் பெறுவதற்கான உதவிக்குறிப்புகள்

வ்வொரு பெண்ணும் தனக்கு அழகான கண்கள் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

அதிலும் இயற்கையாகவே அழகான கண்கள் என்பது பலரால் விரும்பப்படும் ஒரு அம்சமாகும். அது ஈஸி இல்லை என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

அந்த கஷ்டமான விஷயத்தை அடைய சில எளிய குறிப்புகள்.

கண்களைச் சுற்றி இருக்கும் பகுதிகள்

கண்கள் அழகாக தெரிய கண்களை சுற்றி இருக்கும் பகுதியும் அழகாக இருப்பது அவசியம்.

​​காற்றில் உள்ள பொல்யூஷன், சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்கள், உங்கள் சருமத்தில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பது, தூக்கமின்மை போன்ற பல விஷயங்கள் உங்கள் கண்களையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் டல்லாகவும் மற்றும் உயிரற்றதாக காண்பிக்கும்.

மேலும் அல்ட்ரா வயலட் கதிர்கள் உங்கள் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளை நிறம் மாற வைக்கும்.

அதேப்போல தூக்கமின்மையும் கரு வளையங்களை தோற்றுவிக்கும்.

உடலில் போதுமான ஆக்சிட்ன்ட்ஸ் இல்லாத போது அங்கே கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பொதுவாகவே நம் சருமத்தில் ஈரப்பதம் இல்லாமல் போனால் அது வறண்டு போகும், கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தோன்றத் தொடங்கும்.

நம் கண்களைச் சுற்றியுள்ள பகுதிக்கும் அதே தான். அந்த இடத்தில வழக்கத்தை விட அதிகமான ஈரப்பதமூட்டுதல் தேவைப்படுகிறது. ஏனெனில் அந்த இடத்தில் இருக்கும் சருமத்தில், சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கும் எண்ணெய் சுரப்பிகள் இல்லை.

எப்படி இதை சரி செய்வது???

 

அதிக தண்ணீர் குடியுங்கள்

இயற்கையாக அழகு என்று சொல்லும் எல்லா இடத்திலும் இந்த குறிப்பை நாம் கட்டாயம் பார்ப்போம். தண்ணீர் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் நல்லது.

நம் சருமத்தில் மூன்றில் இரண்டு பங்கு நீரினால் ஆனது என்பதால், நம் சருமத்தை நன்கு ஈரப்பதமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது.

கண்களைச் சுற்றியுள்ள பகுதி ஈரப்பதத்துடன் இருந்தால் அது அழகாகவும், இளமை மின்ன இறுக்கமாகவும் இருக்கும்.

ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.