(Reading time: 6 - 11 minutes)

வீட்டு வைத்தியம்

நல்ல இரவு தூக்கத்தைப் பெறுவதும், பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் நிறைந்த ஆரோக்கியமான உணவை உண்பதும் கண்களுக்கு நல்லது.

காட்டனை குளிர்ந்த நீரில் நனைத்து கண்களின் மேல் வைப்பது இரத்த நாளங்களை கட்டுப்படுத்துகிறது. இதனால் கண்கள் இலகுவாகவும், ரிலாக்ஸ்டாகவும் இருக்கும்.

ஃபிரீசரில் இரண்டு ஸ்பூன்களை சிறிது நேரம் வைத்திருந்து, வெளியே எடுத்து, மூடிய கண் இமைகளுக்கு மேல் ஸ்பூனின் வளைந்த பகுதிகளை வைக்கலாம்.

சுருக்கங்கள் அகற்ற வேண்டும் என்றால் முட்டையின் வெள்ளையை நன்கு பீட் செய்து, கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் சுமார் 10-15 நிமிடங்கள் பயன்படுத்துவதன் மூலம் அந்த இடத்தில் சருமத்தை இறுக்கமாக்கலாம்.

டார்க் சர்கில்ஸ் இருந்தால் வெள்ளரிகளின் சாறை அந்த இடத்தில் தேய்க்கலாம்.

கண்களைச் சுற்றியுள்ள சருமத்தில் நிற வேறுபாட்டை குறைக்க தக்காளியை மிக்ஸியில் அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து அந்த இடத்தில் அப்ளை செய்யலாம்.

உங்களுக்கு வீங்கிய அல்லது வீக்கமடைந்த கண்கள் இருந்தால், குளிர்ந்த நீரில் நனைத்த கிரீன் டீ பேக்ஸ் அல்லது பச்சை உருளைக்கிழங்கு துண்டுகளை உங்கள் கண்களுக்கு மேல் வைப்பது வீக்கத்தைக் குறைக்க உதவும்.

சில்லென்று இருக்கும் பாலில் ஓரு காட்டனை நனைத்து அந்தப் பகுதியில் வைப்பதும் உதவும்.

உங்கள் கண்கள் டல் ஆகவும், உள்ளே போயும் தோற்றம் அளித்தால் பாதாம் எண்ணெயுடன் சிறிது தேனை கலந்து, கண்களைச் சுற்றியுள்ள பகுதிக்குப் பயன்படுத்துவதால், சில வாரங்களில் உங்கள் கண்கள் புதியதாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.

   

கணினித் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு குறிப்புகள்

இப்போதெல்லாம் பல வேலைகளுக்காக நாம் பல மணி நேரம் கணினித் திரைக்கு முன்னால் அமர வேண்டி இருக்கிறது. இது உங்கள் மனதையும் உடலையும் சோர்வடையச் செய்வது மட்டுமல்லாமல், உங்கள் கண்கள் மிகவும் டல் ஆகவும், சோர்வாகவும் உணர செய்யக் கூடியது.

அது நிகழாமல் தடுக்க, ஒவ்வொரு 20 - 30 நிமிடங்களுக்கும் திரையில் இருந்து கண்களை திருப்பி வேறு எதையாவது பார்க்க முயற்சிக்கவும்.

மேலும், உங்கள் கண்கள் வறண்டு போகாமல் இருக்க அடிக்கடி கண் சிமிட்டுவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  

 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.