(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் - முகத்தில் இருக்கும் முடிகளை அகற்ற இயற்கை முறைகள் – 1. கடலைமாவு

பெண்களுக்கு முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் ஒரு பெரிய பிரச்சனை என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படி முடிகள் தோன்றுவதற்கு ஹார்மோன் நிலை மாற்றங்கள் (Hormone imbalance) காரணம் என்று சொல்லப்படுகிறது.

முடிகளை அகற்ற வாக்ஸிங், த்ரேடிங், லேசர் என்று செயற்கை வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை செய்வதில் சில பிரச்சனைகள் இருக்கின்றன.

இயற்கையாக இந்த முடிகளை அகற்ற சில வழிகள் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

  

கடலை மாவு

டலை மாவு - 2 ஸ்பூன், பால் - 1 ஸ்பூன் மற்றும் மஞ்சள் - 1 ஸ்பூன் என அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவவும்.

 

30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும்.

 

பின் ஒரு சுத்தமான துணியை எடுத்து முகத்தில் முடி இருக்கும் இடத்தில் மெதுவாக தேய்க்கவும். பின்னர் முகத்தை கழுவவும்.

 

நல்ல முடிவுகள் கிடைக்க வாரத்திற்கு இரண்டு முறை இதை தொடர்ந்து செய்யவும்.

  

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.