(Reading time: 3 - 5 minutes)
Natural home remedies to say goodbye to sun damage
Natural home remedies to say goodbye to sun damage

அழகு குறிப்புகள் # 89 - 2022ல் பின்பற்ற 6 இயற்கை அழகு மற்றும் சரும பராமரிப்பு குறிப்புகள்

வெயிலினால் ஏற்படும் சரும பாதிப்புக்கு குட்பை சொல்ல வைக்கும் இயற்கைபொருட்கள் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யக் கூடிய வழிமுறைகள்

  

எலுமிச்சை சாறு மற்றும் தேன்

எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட் ஆகும்.

  

எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்க்கவும். இதை சருமத்தில் தேய்த்து, 20-30 நிமிடங்கள் உலர வைத்து பிறகு நீரால் கழுவவும்.

  

கடலை மாவு, மஞ்சள் மற்றும் தயிர்

கடலை மாவு சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில் மஞ்சள் சருமத்தை பிரகாசமாக்க கூடியது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் உங்கள் சருமத்தை மிருதுவாக்கும்.

  

கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் சேர்த்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவவும். 15 நிமிடம் வைத்திருந்து, உலர வைத்து, கழுவும் போது மெதுவாக ஸ்க்ரப் செய்யவும்.

  

பப்பாளி, தக்காளி, தர்பூசணி, உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய்

பப்பாளியில் ஏராளமான எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகள் மற்றும் இயற்கை என்சைம்கள் உள்ளன. இது ஒரு நல்ல இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட் ஆகவும் உள்ளது.

  

உருளைக்கிழங்கு சாறு வெறும் ப்ளீச்சிங் ஏஜென்ட் மட்டுமல்ல, கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை ஒளிரச் செய்கிறது.

  

தக்காளி அதன் ஆக்ஸிஜனேற்ற (antioxidant) பண்புகளுக்கு பெயர் பெற்றது மற்றும் சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது.

  

வெள்ளரி ஒரு சருமத்தை குளிரூட்டுக் கூடியது மற்றும் வெயிலினால் சருமத்தில் ஏற்படும் நிற மாற்றத்தை அகற்ற உதவுகிறது.

 

பழுத்த பப்பாளி, தர்பூசணி, உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் வெள்ளரி ஆகியவற்றை 4-5 க்யூப்ஸ் எடுத்து, ஜெல்லி போன்ற பேஸ்ட்டை உருவாக்கவும். பேஸ்ட்டை 15 நிமிடங்கள் குளிர வைக்கவும். பிறகு அந்த பேஸ்ட்டை தடவி, அது சருமத்தில் உறிஞ்சப்படும் வரை தேய்க்கவும்.

  

காஃபி, தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை

காஃபின் இருக்கும் காஃபி சருமத்திற்கு நன்மைகள் அளிக்க கூடியது. வெயிலின் பாதிப்புகளை குறைப்பதுடன் காஃபி முகப்பருவை அகற்றவும் உதவுகிறது. தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்க கூடியது.

காபி தூள், தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து ஒரு கெட்டியான பேஸ்ட் செய்து 10 நிமிடங்களுக்கு ஸ்க்ரப் செய்யவும். 10 நிமிடம் விட்டு வைத்து பின் நீரால் கழுவவும்.

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.