(Reading time: 4 - 7 minutes)

அழகு குறிப்புகள் # 89 - 2022ல் பின்பற்ற 6 இயற்கை அழகு மற்றும் சரும பராமரிப்பு குறிப்புகள்

ழகான சருமத்தை விரும்பாதவர் யார்? பளிச்சென்ற சருமம் வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாகும். நமது பிஸியான வாழ்க்கையில் நாம் அடிக்கடி சருமப் பராமரிப்பைப் புறக்கணிக்கிறோம். எனவே ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவதற்கான முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது அவசியம். நல்ல பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறைகளும் இதைச் செய்ய உதவும். இதுவே இயற்கையான முறையில், வயதான தோற்றம் வருவதையும் மற்ற சரும தொடர்பான பிரச்சனைகளையும் தாமதப்படுத்தும்.

2022 ஆம் ஆண்டில், நீங்கள் பின்பற்றக்கூடிய சில எளிய அழகு மற்றும் சரும பராமரிப்பு குறிப்புகள் இங்கே:

   

வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

சருமத்தைப் பராமரிப்பதற்கான முதல், முக்கிய வழி சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து அதைப் பாதுகாப்பதாகும். தீங்கு விளைவிக்கும் கதிர்கள் சரும செல்களை சேதப்படுத்தும். மேலும் இதனால் சுருக்கங்கள், கரும் புள்ளிகள், சில சமயங்களில் சரும புற்றுநோயையும் கூட ஏற்படுத்தலாம். எனவே நீங்கள் வெயிலில் வெளியே செல்ல வேண்டி இருந்தால் குடையை எடுத்துச் செல்லுங்கள் அல்லது சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.

  

உங்கள் சருமத்தை மென்மையான முறையில் கவனித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் முகத்திற்கு சூடாக இருக்கும் வெந்நீரைப் பயன்படுத்தினால், அது முகத்தில் உள்ள எண்ணெயை நீக்கி, சருமத்தை உலர வைக்கும். எனவே வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவது நல்லது. உங்கள் சருமத்திற்கு கடுமையான ஃபேஸ் வாஷ், சோப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. உங்கள் முகத்தை கழுவியவுடன், மென்மையான துண்டை வைத்து மெதுவாக தொட்டு தொட்டு எடுக்கவும், கடுமையாக தேய்க்க வேண்டாம்.

   

மாய்ஸ்சரைசரை தினமும் பயன்படுத்தவும்

வறண்ட சருமம் உள்ளவர்கள், தினமும் முகத்தில் நல்ல மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது அவசியம். இது ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும். SPF கொண்ட மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த டாடர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

 

ஆரோக்கியமான உணவு உட்கொள்ளல்

ஆரோக்கியமான உணவு என்பது சருமத்திற்கு மட்டுமல்ல, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானது. எனவே உங்கள் உணவில் நிறைய காய்கறிகள் மற்றும் பழங்கள், புரதங்கள் மற்றும் தானியங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். சரிவிகித உணவைக் உட் கொள்வது முக்கியம். ஆரோக்கியமற்ற கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை குறைத்துக் கொள்ளுங்கள். இது சருமத்திற்கு இளமையான தோற்றத்தை அளிக்க உதவும். இது தவிர பளபளப்பான சருமத்திற்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.

   

மன அழுத்தத்தைக் குறைத்து, நன்றாக தூங்குங்கள்

மன அழுத்தம் பல சரும பிரச்சனைகளை உருவாக்குகிறது. மேலும் சருமத்தை மிகவும் சென்சிடிவ் ஆனதாகவும் மாற்றுகிறது. எனவே ஆரோக்கியமான சருமம் மற்றும் மன அமைதியைப் பெற நல்ல தூக்கம் அவசியம். தூக்கம் புத்துணர்ச்சி பெற உதவும். ஒவ்வொரு நாளும் 8 மணி நேர தூக்கம் பரிந்துரைக்கப் படுகிறது.

  

சரியான சரும பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றுங்கள்

ஆரோக்கியமான சருமத்தைப் பெற நீங்கள் சரியான சரும பராமரிப்பு வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். டோனரை தினமும் பயன்படுத்துங்கள், இதனால் சருமம் நீரேற்றத்துடன் இருக்கும். இது அழுக்குகளை நீக்கி, சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவும்.

  

வை 2022ஆம் ஆண்டில் நீங்கள் பின்பற்றக்கூடிய சில சரும பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்புகள். இதனால் உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

  

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.