(Reading time: 5 - 9 minutes)
Easy tips to keep your skin beautiful and moisturized
Easy tips to keep your skin beautiful and moisturized

அழகு குறிப்புகள் # 91 - உங்கள் சருமத்தை அழகாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க ஈஸி டிப்ஸ்

நாம் அனைவரும் மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தை விரும்புகிறோம். ஆனால் அதிகரித்து வரும் மாசு அளவு மற்றும் UV கதிர்களின் காரணமாக இது எளிதான விஷயமாக இருப்பது இல்லை.

   

ஈரப்பதம் நிறைந்த சருமம் ஆரோக்கியமான மற்றும் அழகின் அறிகுறியாகும். மேலும் ஈரப்பதம் சருமத்தின் இளமைப் பண்புகளை பராமரிப்பதில் பெரும் பங்களிக்க கூடியதும் கூட!

   

நமது சருமம் குளிர்காலத்தில் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் சூரிய ஒளி மற்றும் மாசுபாட்டின் காரணமாக ஈரப்பதத்தை இழப்பதைச் சமாளிக்க விரும்புகிறது. இயற்கையாகவே அப்படி நம் சருமத்திற்கு ஈரப்பதம் அதிகரிக்க, சில வழிமுறைகள் இதோ:

   

சரும பராமரிப்புக்கு மற்றும் அழகுக்கு இயற்கையான மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தவும்

   

கற்றாழை - அலோ வேரா

   

கற்றாழை ஜெல் அல்லது சாறு தினமும் நேரடியாக சருமத்தில் தடவலாம். 20 நிமிடங்கள் விட்டுவிட்டு, நீரில் கழுவவும்.

   

கற்றாழை ஒரு இயற்கை மாய்ஸ்சரைசர் மற்றும் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. இது ஒரு ஆன்டி-ஆக்சிடன்ட் அதனால் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. எனவே சருமத்தில் தோன்றும் வயதின் அறிகுறிகளை தாமதப்படுத்துகிறது.

     

கற்றாழை சருமத்தை மென்மையாக வைத்திருப்பதோடு, குணப்படுத்தும் பண்புகளையும் கொண்டுள்ளது. அதைக் கொண்டு மாய்ஸ்சரைசிங் க்ரீமையும் தயார் செய்யலாம். அலோ வேரா ஜெல் மற்றும் மினரல் வாட்டரை சம அளவு கலந்து கிரீம் உருவாகும் வரை சூடாக்கவும். ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் மூடி வைக்கவும்.

   

பப்பாளி

   

சரும நன்மைகளைப் விரும்பும் போது ஒரு அருமையான ஆயுதம் பப்பாளி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.