(Reading time: 5 - 9 minutes)
Easy tips to keep your skin beautiful and moisturized
Easy tips to keep your skin beautiful and moisturized

    

பழுத்த பப்பாளியுடன் தேன் கலந்தால் அதில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

   

பப்பாளியில் ஏராளமான வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள் மற்றும் பப்பைன் உள்ளது. இது இறந்த செல்களை அகற்ற உதவுகிறது மற்றும் சருமத்தின் துளைகள் அடைக்கப்படுவதை தடுக்கிறது.

   

பப்பாளியை நன்றாக அரைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் இரண்டு டீஸ்பூன் பாலுடன் சேர்த்தால் உங்களுக்கு அதிக சத்தான கலவையை கொடுக்கும். இதை 15 நிமிடங்கள் சருமத்தில் தடவி, பின், வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

   

வைட்டமின் மற்றும் ஜின்க் (zinc) நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்

   

உங்கள் தினசரி உணவில் ஜின்க் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

   

ஆன்டிஆக்ஸிடன்ட் ஆன க்ரீன் டீ மற்றும் மஞ்சள் ஆகியவையும் உங்கள் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் மாற்ற உதவும்.

   

சக்கரை வள்ளிக் கிழங்கு, தர்பூசணி, கிவி, பாதாம், ஓட்ஸ், பால், அவகேடோ போன்ற காய்கறிகள், பழங்கள் மற்றும் பானங்கள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.

   

சூடான நீரைத் தவிர்க்கவும்

    

சருமத்தை பாதுகாக்க தண்ணீர் முக்கியமான காரணியாகும். ஏனென்றால் நாம் அதை தினமும் பயன்படுத்துகிறோம். எனவே, வெந்நீரைத் தவிர்த்து, வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

   

சூடான நீர் பயன்படுத்தினால், அது சருமத்தை மிக விரைவாக வறண்டு போய் விட செய்யும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.