(Reading time: 3 - 5 minutes)

Beauty Tips # 08 - அழகான பாதங்கள் பெற வீட்டிலேயே பெடிக்யூர் (Pedicure) எனப்படும் பாத பராமரிப்பு செய்வது எப்படி?

Pedicure

ன்றைய காலத்தில் அழகு நிலையங்கள் எங்கும் பரவி இருக்கின்றன. ஆனால் இன்றும் அழகு நிலையத்திற்கு செல்ல தயங்கும் பெண்களும், அது எனக்கு எதற்கு என சொல்லும் சற்றே மூத்த / முந்தைய தலைமுறையினரும் இருக்க தான் செய்கிறார்கள்.

அவர்களுக்கும், தேவைபட்டால் அனைவரும் வீட்டிலேயே பெடிக்யூர் (Pedicure) செய்வது எப்படி என்று இன்று பார்ப்போம்.

பெடிக்யூர் என்றால் என்ன?

பாதம் மற்றும் கால் விரல் நகங்களை சுத்தம் செய்து பராமரிப்பதை தான் பெடிக்யூர் என்கிறார்கள்.

இது பாதங்களை சுத்தம் செய்வதுடன் பாதங்களுக்கு ஓய்வையும் (relaxation) தருகிறது.

பெடிக்யூர் செய்வது எப்படி?

Pedicure

கால் நகங்களில் பழைய நெயில் பாலிஷ் (Nail Polish) இருந்தால் முதலில் அதை நெயில் பாலிஷ் ரீமூவர் (Nail polish remover) கொண்டு அகற்றுங்கள்

Pedicure

நகங்களை நெயில் கட்டர் (Nail cutter) கொண்டு அழகாக வெட்டுங்கள்.

Pedicure

தேவை என்றால் பைலர் (Filer) பயன்படுத்தி நகங்களை அழகு படுத்துங்கள்.

Pedicure

உங்கள் பாதங்களை ரிலாக்ஸ் செய்ய, பாதங்கள் மற்றும் உள்ளங்கால்களில் மெலிதாக ஈரமடைந்த கடல் உப்பு கொண்டு பாதங்களில் இருக்கும் கடினமான தோலில் மெல்ல தேயுங்கள்.

Pedicure

பின் சூடான நீர் இருக்கும் ஒரு பாத்திரத்தில் உங்களின் பாதங்கள் இரண்டையும் சேர்த்து ஒன்றாக வையுங்கள். இது உங்களின் பாதங்களுக்கு மிருதுத்தன்மை மற்றும் ஓய்வை (relaxation) கொடுக்கும்.

     சூடான தண்ணீரில் நேராக உப்பை கலந்தும் இதை செய்யலாம்.

     உப்பிற்கு பதிலாக இதற்கென கடைகளில் விற்கப்படும் foot soak / foot cleanserம் பயன்படுத்தலாம்.

                Foot cleanserக்கு பதிலாக ஷாம்பூ அல்லது பாடி வாஷும் பயன்படுத்தலாம்.

     பாத்திரத்திற்கு பதிலாக இதற்கென பிரத்தியேகமாக விற்க படும் footbathம் பயன்படுத்தலாம்

Pedicure

உங்கள் பாதங்களில் காய்த்து போன தடிமனான தோல் இருந்தால் பாததிற்கென விற்க படும் பைலர் (Foot file paddle) கொண்டு மெல்ல தேயுங்கள்.

ஒரு தடவை பெடிக்யூர் செய்து மென்மையான பாதம் பெற இயலாது. தினமும் பாதங்களை நன்கு பரிமாரிப்பதுடன் தொடர்ந்து பெடிக்யூரும் செய்தால் உங்களின் பாதங்களும் மெல்ல பட்டு போல் மென்மையாக மாறும்.

Foot fileக்கு பதிலாக pumice stoneம் பயன்படுத்தலாம்.

Pedicure

உங்களிடம் நைல் பிரஷ் (Nail brush) இருந்தால், அதை பயன்படுத்தி பாதம் மற்றும் கால்விரல் நகங்களை அழுத்தி தேய்த்து நக இடுக்குகளில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்யுங்கள்.

Pedicure

பாதங்களை நன்கு துடைத்து உலர செய்யுங்கள்.

Pedicure

உள்ளங்கையில் மொய்ஷரைசிங் க்ரீம் எடுத்துக் கொண்டு பாதங்கள் மற்றும் கால் விரல்களை மெல்ல மசாஜ் செய்யுங்கள்.

பஞ்சு அல்லது மென்மையான துணியை பயன்படுத்தி அதிகமாக இருக்கும் க்ரீமை பாதங்கள் மற்றும் கால் விரல்களில் இருந்து அகற்றுங்கள்.

Pedicure

இப்போது பிடித்தால் நக சாயம் பூசிக் கொள்ளுங்கள்.

தை மாதத்திற்கு ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் பாதங்கள் அழகாக, மென்மையாக இருக்கும்.

நீங்கள் அதிக நேரம் நிற்பவர் அல்லது நடப்பவர் என்றால் இரண்டு வாரத்திற்கு ஒரு முறையும் பெடிக்யூர் செய்யலாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.