Beauty Tips # 10 - முகம் பொலிவடைய வீட்டிலேயே செய்யக் கூடிய பேஷியல் பேக்
கடலை மாவு - தேன் - எலுமிச்சை - மஞ்சள் பேக்
ஒரு சிறிய பாத்திரத்தில் 2 ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் தேன், ¼ ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ½ ஸ்பூன் எலுமிச்சை பழ சாறு எடுத்துக் கொள்ளவும்.
அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்துக் கொள்ளவும்.
பின் சுத்தமான கைகளால் அந்த கலவையை சீராக முகத்தில் தேய்க்கவும்.
இருபது நிமிடங்கள் வைத்திருந்து விட்டு முகத்தை நீரால் கழுவவும்.
இப்பொழுது உங்களின் முகம் மென்மையாக, பொலிவாக இருப்பதை உங்களாலேயே உணர முடியும்.
சிறப்புகள்:
இந்த ஃபேஷியல் ஃபேக்கில் புரதங்கள் நிறைந்த கடலை மாவு உள்ளது.
மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு இயற்கையாக சருமத்தை அழகாக்க கூடியவை.
தேன் முகத்திற்கு ஈரப்பசையைக் கொடுப்பதுடன், சருமம் வெண்மை அடையவும் உதவுகிறது.
வீட்டிலேயே எளிதாக செய்யக் கூடிய இந்த பேஷியலை செய்து தான் பாருங்களேன்.