தொப்பையை குறைக்க ஐந்து நிமிட உடற்பயிற்சி - செட் - 03
Note:எந்த உடற்பயிற்சியை செய்ய தொடங்கும் முன்பும் உங்களின் டாக்டரிடம் பேசி அது உங்களுக்கு உகுந்ததா என்று தெரிந்துக் கொள்வது நல்லது.

வயிற்று தொப்பை என்பது இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
குறிப்பாக முப்பதுகளில் இருக்கும் பெண்கள் தொப்பையினால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இந்த் காலக்கட்டத்தில் குழந்தை குடும்பம் வேலை என பல்வேறு பரிணாமங்களை ஏற்றுக் கொள்ள வேண்டி இருப்பதால் அவர்களை பற்றியோ அவர்களின் உடலை பற்றியோ சிந்திக்க முடிவதில்லை. அப்படியே சிந்தித்தாலும் உடல் நலனுக்காக பிரத்தியேகமாக நேரம் செலவிட முடிவதில்லை.
ஆனால் அப்படி இருப்பது நல்லதில்லை. தொப்பையினால் பல பல உடல் நல சீர் கேடுகளும் ஏற்படுகின்றன.
எனவே தொப்பையை குறைக்கும் வழிமுறைகள் செய்வது நல்லது.
நேரமில்லை என சொல்பவர்களுக்கு உதவ தான் இந்த ஐந்து நிமிட தொப்பை குறைக்கும் உடற்பயிற்சி.
உணவு கட்டுபாடுடன், இந்த தொடரில் தொகுக்கப்படும் உடற்பயிற்சிகளையும் தொடர்ந்து செய்தால் கட்டாயம் மாற்றம் தெரியும்.
அதெப்படி ஐந்து நிமிடங்கள் செய்தால் மாற்றம் வரும் என்று கேட்கிறீர்களா? மந்திரம் மாயாஜாலம் எல்லாம் இல்லை. தொடர்ந்து தவறாமல் நீங்கள் இந்த பயிற்சிகளை செய்வது தான் முக்கியம்.
மேலும் சில மணித்துளிகள் உடற் பயிற்சி செய்ய உங்களுக்கு ஆவல் இருந்தால் கட்டாயம் வேறு பயிற்சிகளை செய்யலாம். நடப்பது, ஜாக்கிங், சைக்ளிங் போன்றவை கூட மிகவும் நல்லது.
ஐந்து நிமிடங்கள் தானே செய்து தான் பாருங்களேன்....!
முன்பு பகிர்ந்த செட் 1, செட் 2 பயிற்சிகளை தொடர்ந்து இதோ செட் 3
இந்த உடற்பயிற்சிகளையும் செட்டாக செய்ய வேண்டும். எப்படி செய்ய வேண்டும் என்ற அட்டவணை இதோ:
உடற்பயிற்சி 5 – 1 நிமிடம்
உடற்பயிற்சி 6 – 1 நிமிடம்
உடற்பயிற்சி 5 – 1 நிமிடம்
உடற்பயிற்சி 6 – 1 நிமிடம்
உடற்பயிற்சி 5 – 1 நிமிடம்
மொத்தம் – 5 நிமிடங்கள்
ஒருநாள் செட் 1, மறுநாள் செட் 2, அதற்கு அடுத்த நாள் செட் 3 என்று மாற்றி மாற்றி செய்ய வேண்டும்.
உதாரணமாக வியாழன் தொடங்குகிறீர்கள் என்றால்,
வியாழன் - செட் 1
வெள்ளி - செட் 2
சனி - செட் 3
திங்கள் - செட் 1
செவ்வாய் - செட் 2
புதன் - செட் 3
ஞாயிறு எங்கே எனக் கேட்கிறீர்களா, அன்று நம் உடற்பயிற்சிக்கும் விடுமுறை ![]()
உடற்பயிற்சி – 5 - Bridge and press with and without weight
இந்த பயிற்சியை முதலில் dumbbell பயன்படுத்தாமல் செய்து விட்டு, பழக்கமான பின் dumbbell பயன்படுத்தி செய்யலாம்.
தொடக்க நிலை (Beginners) - without weight
தரையில் நேராக படுத்து, லை மடிக்கவும். பின் உங்களின் முழங்கையையும் நேராக மடிக்கவும் (மேலே உள்ள படம் 1)
மெல்ல இடுப்பை மேலே உயர்த்தவும். முழங்காலில் இருந்து தோள்பட்டை வரை நேர்கோடாக இருக்க வேண்டும்.
அதே நிலையில் மெல்ல கைகளை நேராக நிமிர்த்தவும் (மேலே உள்ள படம் 2)
மூன்று வினாடிகள் அப்படியே இருந்து விட்டு தொடக்க நிலைக்கு செல்லவும்.
தொடர்ந்து ஒரு நிமிடம் இந்த உடற்பயிற்சியை செய்யவும்.
உயர் நிலை (Advanced level) - with weight
கைகளில் dumbbellகள் உடன், தரையில் நேராக படுத்து, முழங்காலை மடிக்கவும். பின் உங்களின் முழங்கையையும் நேராக மடிக்கவும்.
மெல்ல இடுப்பை மேலே உயர்த்தவும். முழங்காலில் இருந்து தோள்பட்டை வரை நேர்கோடாக இருக்க வேண்டும் (மேலே உள்ள படம் 1)
அதே நிலையில் மெல்ல dumbbellகளை நேராக நிமிர்த்தவும் (மேலே உள்ள படம் 2)
dumbbell இல்லையென்றால் வேறு கனமான பொருளை பயன்படுத்தலாம். ஆனால் கவனமாக இருங்கள் உங்களை அந்த பொருளினால் காயப் படுத்திக் கொள்ளாதீர்கள்.
மூன்று வினாடிகள் அப்படியே இருந்து விட்டு தொடக்க நிலைக்கு செல்லவும்.
தொடர்ந்து ஒரு நிமிடம் இந்த உடற்பயிற்சியை செய்யவும்.
உடற்பயிற்சி – 6 – Supine knee tuck
கால்களை நேராக நீட்டி படுக்கவும். கைகளை உங்கள் உடலின் அருகே விரித்து வைக்கவும். உள்ளங்கைகள் தரையை தொட்டவாறு இருக்க வேண்டும்.
அதே நிலையில் மெல்ல வலது காலை மடித்து, மார்பின் அருகே கொண்டு வரவும்.
பின் வலது காலை கீழே இறக்கும் அதே நேரத்தில் இடது காலை மடித்து மார்பின் அருகே கொண்டு செல்லவும்.
கிட்டத்தட்ட படுத்தபடி ஓடுவது போன்ற பயிற்சி.
இதையே தொடர்ந்து ஒரு நிமிடம் செய்யவும்.
அடுத்த செட்டை விரைவில் பகிர்கிறேன் நீங்கள் இந்த மூன்று செட்முகளையும் தொடர்ந்து செய்யுங்கள்.
சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்.
{kunena_discuss:747}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.


