சீன மருத்துவம் சொல்லும் ‘இன்ஸ்டன்ட் எனர்ஜி’க்கான வழிமுறை!
Note:எந்த உடற்பயிற்சியை செய்ய தொடங்கும் முன்பும் உங்களின் டாக்டரிடம் பேசி அது உங்களுக்கு உகுந்ததா என்று தெரிந்துக் கொள்வது நல்லது.
நாள் முழுவதும் வேலை செய்து சோர்வாக இருக்கிறதா? உங்களின் எனர்ஜியை சட்டென அதிகரிக்க இதை முயற்சி செய்து பாருங்கள்.
தரையில் அமர்ந்து, உங்கள் முழங்கால்கள் இரண்டையும் கன்னத்தில் படுமாறு கைகளால் கட்டிக் கொள்ளுங்கள்.
உங்கள் முதுகை மெல்ல வளைத்து, கால்களை சற்றே தரையில் இருந்து மேலே தூக்கி முன்னும் பின்னும் அசையுங்கள் [இரண்டு திசையிலும் சில அங்குலங்கள் நகர்ந்தாலே போதும்].
அப்படியே 12 முறை செய்யுங்கள்.
இது போன்ற நிலையான இயக்கம், மூளை அலைகளில் இருந்து வரும் ஆற்றல் உற்பத்தியை தூண்டி, உடனே உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் என சீன மருத்துவ பயிற்சியாளர்கள் சொல்கிறார்கள்.
எளிதாக செய்யக் கூடியது தான்... அடுத்த முறை சோர்வாக இருக்கும் போது முயற்சி செய்து தான் பாருங்களேன்!
{kunena_discuss:747}