(Reading time: 2 - 3 minutes)

Health Tip # 78 - கீரை வகைகளின் பயன்கள் - சசிரேகா

keerai

 

தூதுவளைக்கீரை

இருமலைப் போக்கும்

சளியை ஒழிக்கும்

ஊளைச்சதை குறையும்

குரல் இனிமையாகும்

மூளை பலமாகும்

 

பருப்புக் கீரை

தாய்ப்பால் பெருகும்

மாதவிலக்கை ஒழுங்கு செய்யும்

கர்ப்ப நோய்கள் விலகும்

 

புதினாக் கீரை

வாய் நாற்றத்தை நீக்கும்

பித்தத்தை கண்டிக்கும்

கொழுப்பை குறைக்கும்

 

பொன்னாங்கன்னி கீரை

கண்களுக்கு குளிர்ச்சியை தரும்,

கண் நோய்களை நீக்கும்,

முடி வளரும், முடி கொட்டாது,

மேனி அழகாகும்

என்ன சாப்பிட்டாலும் சிலருக்கு உடம்பில் சதை பிடிக்காது இந்த குறையை நீக்க பொன்னாங்கன்னி கீரையை துவரம் பருப்புடன் கடைந்து சிறிது நெய்விட்டு சாப்பிட்டு வந்தால் சதை பிடிக்கும்

 

முளைக்கீரை

மலம் இளக்கும்,

குடலின் சூட்டை ஆற்றும்,

ஜீரணம் செய்யும்

 

சிறுக்கீரை

மூத்திரப்பையில் ஏற்படும் கோளாறு நீக்கும்

 உணவால் ஏற்படும் விஷத்தன்மையை நீக்கும்

கண்கூச்சத்தை நீக்கி கண்பார்வை மிகும்

 

முருங்கைக்கீரை

உடம்பில் உள்ள அதிக உப்பை அகற்றும்

ரத்தத்தை தூய்மை செய்யும் ரத்த அழுத்தம் சீர்படும்

 

வெந்தயக்கீரை

வெந்தயக்கீரையை நெய்யில் பிரட்டி சாப்பிட்டால் தொண்டைப்புண் குணமாகும்

பேச்சாளர்கள் பாடகர்கள் போன்றவர்கள் வெந்தயக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் தொண்டையில் கீச் கீச் இருக்காது

 

அரைக்கீரை

அரைக்கீரையை சாறு எடுத்து லேசாக கொதிக்க வைத்து உப்பு மிளகு தூள் கலந்து பருகி வந்தால் பார்வைக் கோளாறு நீங்கும் ரத்த விருத்தி ஏற்படும்

 

{kunena_discuss:1131}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.