(Reading time: 3 - 6 minutes)

உங்கள் பற்களை சிதைக்கும் 10 பழக்க வழக்கங்கள்

பற்களை கடிப்பது

பற்களை கடிப்பது காலப்போக்கில் பற்கள் தேய காரணம் ஆகிறது.

கோபம் என்பதை தாண்டி இது பெரும்பாலும் மன அழுத்தம் மற்றும் தூக்க பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது.

இதை கட்டுப்படுத்துவது கடினம். நல்ல பல் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

 

மிட்டாய், சாக்லேட்

சர்க்கரை நிறைந்த இனிப்புகலை தொடர்ந்து சாப்பிடுவது பற்களுக்கு தீங்கி விளைவிக்கும்.

எனவே மிட்டாய் போன்றவற்றை சாப்பிட்டால் உடனே பல் துலக்குவது நல்லது.

இல்லை என்றால் பல் சொத்தை ஏற்படும்.

 

சோடா, பழ ஜூஸ்

இனிப்பு என்ற உடன் சாக்லேட் மட்டுமே குற்றவாளி என்று சொல்ல முடியாது.

ஒரு சோடாவில் 11 டீஸ்பூன் வரை சர்க்கரை இருக்கும். கூடவே அதில் பாஸ்போரிக் மற்றும் சிட்ரிக் அமிலங்களும் உள்ளன.

இவை பற்களின் எனாமலை கெடுக்கும்.

பழ ஜூஸ்கள் ஆரோக்கியமானவை என்றாலும் அளவுக்கு அதிகமாக பருகினால் அதில் இருக்கும் இனிப்பும் பற்களில் சேதத்தை ஏற்படுத்தும்.

 

ஐஸ் க்யூப்ஸ் கடிப்பது

ஐஸை பற்களால் கடிப்பது பாதிப்பில்லாதது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் கடினமான, உறைந்த ஐஸ் க்யூப்கள் பற்களை சிதைக்க கூடியவை.

மேலும் ஜில்லென்று இருக்கும் ஐஸ் க்யூப்கள் பற்களுக்குள் இருக்கும் மென்மையான திசுக்களில் எரிச்சலூட்டி பல் வலி ஏற்பட காரணமாகலாம்.

ஐஸ் க்யூப்கள் மட்டும் அல்லாமல், அதிக சூடான உணவு மற்றும் மிகவும் குளிர்ந்த உணவு உண்பது பல் வலியைத் தூண்டும்.

 

உங்கள் பற்களை வைத்து மற்ற பொருட்களைத் திறப்பது

உங்கள் பற்களை பயன் படுத்தி பாட்டில் மூடிகள் அல்லது பிளாஸ்டிக் கவர் போன்றவற்றை திறப்பது வசதியாக இருக்கலாம். ஆனால் இது பல் ஆரோக்கியதிற்கு ஏற்ற பழக்கம் இல்லை. உங்கள் பற்களை கருவியாகப் பயன்படுத்துவதால் அதில் விரிசல் ஏற்படலாம்.

எனவே உங்கள் பற்களை சாப்பிடுவதற்கு மட்டுமே பயன்படுத்துங்கள்.

 

உருளைக்கிழங்கு சிப்ஸ்

பற்களின் பிளேக்கில் உள்ள பாக்டீரியாக்கள் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை அமிலமாக உடைக்கும். இந்த அமிலம் 20 நிமிடங்களுக்கு பற்களைத் தாக்கும். அதுவும் சாப்பிட்ட உணவு பற்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டால் அல்லது நீங்கள் அடிக்கடி சிற்றுண்டி சாப்பிட்டால் இந்த அமிலம் இன்னும் அதிக நேரம் தாக்கும்.

எனவே உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது பற்களில் சிக்கிக்கொள்ளும் பிற உணவுகளை சாப்பிட்ட பிறகு பற்களை உடனே சுத்தம் செய்வது நல்லது.

 

சிற்றுண்டி

சிற்றுண்டி பொதுவான உணவை விட குறைவான உமிழ்நீரை உற்பத்தி செய்யும்.

அதனால் உங்கள் பற்களில் உணவு துணுக்குகளை மணிக்கணக்கில் வைக்க அனுமதிக்கிறது.

எனவே அடிக்கடி சிற்றுண்டி சாப்பிடுவதை தவிர்க்கவும்.

 

பென், பென்சில்களை கடிப்பது

ஐஸ் க்யூப்ஸ் போலவே பென், பென்சில் போன்றவற்றை கடிப்பதும் பற்களுக்கு கெட்ட பழக்கம். இதுவும் பற்களில் விரிசலை ஏற்படுத்தும்.

 

காபி குடிப்பது

காபியின் அடர் நிறம் மற்றும் அமிலத்தன்மை காலப்போக்கில் பற்களில் மஞ்சள் நிறத்தை ஏற்படுத்தும்.

 

புகை பிடித்தல்

சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை பொருட்கள், பற்களைக் கறைபடுத்தி, ஈறு நோய் வர காரணமாக அமையலாம். அது மட்டும் அல்லாமல் புகையிலை வாய், உதடு மற்றும் நாக்கு புற்றுநோயையும் ஏற்படுத்தும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.