(Reading time: 2 - 3 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - நெஞ்செரிச்சல் – என்ன செய்யலாம்?

நெஞ்செரிச்சல் என்பது பலருக்கும் நன்குப் பரிச்சயமான ஒரு பிரச்சனை.

நாம் சாப்பிட்ட உணவு வயிற்றில் இருந்து மீண்டும் உணவுக்குழாய் மூலம் தொண்டை நோக்கி வருவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

 

ந்த நெஞ்செரிச்சல் வராமல் தடுக்க மாத்திரைகள் அல்லாத சில வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். அவற்றில் சில இதோ உங்களுக்காக.

 

குறைந்த அளவிலான கொழுப்பு இருக்கும் ஆரோக்கியமான உணவை மட்டும் உண்ணுங்கள் .

 

உணவு உண்ட உடனே தூங்குவதை / படுப்பதை தவிர்த்து விடுங்கள்.

 

உணவு உண்ணும் போது நேராக அமர்ந்து உட் கொள்ளுங்கள்

 

மது, காஃபின் உணவுகள், காரமான உணவு, முழு கொழுப்பு நிறைந்த பால், சோடா மற்றும் தக்காளி, எலுமிச்சை, ஆரஞ்சு பழச்சாறு போன்ற அமில உணவுகள் உண்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.

 

எடை அதிகமாக இருந்தால், எடையை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

 

புகைப்பிடிப்பதைத் தவிர்த்து விடுங்கள்.

 

தொடர்ந்து தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

 

உண்ணும் உணவு அளவை குறையுங்கள்

 

மேலே குறிப்பிட்ட ஆரோக்கியமான மாற்றங்களை செய்வதால் நெஞ்செரிச்சல் வராமல் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம்.

 

முயற்சி செய்துப் பாருங்கள்.

    

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.