(Reading time: 2 - 3 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - பக்கவாதமும் அதன் அறிகுறிகளும்

க்கவாதம் என்பது உடலின் ஒரு பகுதியில் உள்ள தசை அல்லது பல தசைகள் சேர்ந்த குழுவை அசைக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாமல் போவது.

பெரும்பாலும், இது தசைகள் சம்மந்தமான பிரச்சனையாக இருப்பதில்லை.

 

நம் உடலின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மூளை வரை சங்கிலியாக இணைந்து இயங்கும் நரம்பு செல்களில் எங்காவது ஒரு சிக்கல் ஏற்பட்டால், அது பக்கவாதம் ஏற்பட காரணமாகிறது.

  

பொதுவாக இந்த நரம்பு செல்கள் தான் நம் தசைகளை அசைப்பதற்கான சமிக்ஞைகளை வழங்குகின்றன.

இதில் முக்கிய பங்காற்றும் மூளை, நரம்புகள் அல்லது முதுகெலும்பு போன்றவற்றில் சேதம் ஏற்படும் போது, அசைவதற்கான சமிக்ஞைகள் அந்த தசைகளை சென்றடைவதில்லை. எனவே அந்த தசைகள் கட்டுப்பாடில் இல்லாமல் போய் பக்கவாதம் ஏற்படுகிறது.

 

பக்கவாதத்தின் அறிகுறிகள் என்ன?

க்கவாதத்தின் அறிகுறிகளை கண்டறிவது எளிது.

 

ஸ்ட்ரோக் அல்லது முதுகெலும்பு காயம் காரணமாக திடீரென உடல் பாகங்களை ஓரளவு அல்லது முழுவதுமாக நகர்த்த இயலாது.

அதே நேரத்தில், தசை விறைப்பு ஏற்படும் மற்றும் பாதிக்கப்பட்ட உடல் பாகங்களில் உணர்வும் குறையும்.

  

வேறு மருத்துவ நிலை காரணமாக பக்கவாதம் ஏற்படும் போது, தசைக் கட்டுப்பாடு மற்றும் உணர்வை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க நேரிடும்.

 

சிலர் பக்கவாதம் வந்து தனது தசைகளின் கட்டுப்பாட்டை இழப்பதற்கு முன்பு அந்த பகுதியில் கூசும் உணர்வு, உணர்ச்சி இல்லாமல் இருப்பது அல்லது தசைப்பிடிப்பையும் உணரலாம்.

    

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.