(Reading time: 2 - 4 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமாக இருக்க 5 ஈஸி குறிப்புகள்

வீட்டில் சாப்பிடுங்கள்:

பெரும்பாலான ஹோட்டல் உணவுகளில் அதிக கொழுப்புகள் நிறைந்துள்ளன. அப்படி அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவை உண்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

எனவே, உங்களால் முடிந்தவரை அடிக்கடி வீட்டில் சாப்பிடுங்கள்.

 

உடற்பயிற்சி:

வாரத்திற்கு ஐந்து முறையாவது 30 - 40 நிமிடங்கள் வாக்கிங் செய்யுங்கள். மூன்று நாட்கள் ரெசிஸ்டன்ஸ் உடற்பயிற்சி செய்யுங்கள். இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க,  ஸ்ட்ரேச்சிங் மற்றும் எடை தூக்குவது போன்ற சில ரெசிஸ்டன்ஸ் பயிற்சியை செய்வது நல்லது. சாதாரணமாக வாக்கிங் என்று நாம் சொல்வது ஒரு ஏரோபிக் பயிற்சியாகும். இது உங்கள் ஸ்டாமினாவை அதிகரிக்க உதவுகிறது.

 

நன்றாக தூங்குங்கள்:

ஒருவர் குறைந்தது ஆறு மணிநேர தூக்கத்தைப் பெற வேண்டும். உங்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்கவில்லை என்றால், உங்கள் உடல், மனம், யோசிக்கும் திறன் என அனைத்தும் மாறுப்படும்.

 

வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்:

நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், உங்கள் உடல், மன மற்றும் உணர்ச்சி என அனைத்தும் சீராக இருக்கும். ஒரு துடிப்பான வாழ்க்கையை உருவாக்குங்கள். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிடுங்கள். கோபப் படுவது, டென்ஷனாவது அனைத்தையும் குறைத்து மகிழ்ச்சியை நோக்கமாகக் கொள்ளுங்கள்.

 

வருடாந்திர ஹெல்த் செக்-அப்பிற்கு செல்லுங்கள்:

நீங்கள் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் இது மிகவும் முக்கியமானது. தவறாமல் ஒரு நல்ல மருத்துவமனை / மருத்துவரிடம் ஹெல்த் செக் அப் செய்துக் கொள்ளுங்கள்.

    

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.