(Reading time: 3 - 6 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - க்ளூகோஸ் மீட்டர் பயன்படுத்தி சர்க்கரை அளவை நீங்களே தெரிந்துக் கொள்ளலாம்

டையபடீஸ் எனும் நீரழிவு / சர்க்கரை நோய் இருப்பவர்கள் தங்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை (க்ளூகோஸ்) அளவை அவ்வப்போது பரிசோதனை செய்து தெரிந்துக் கொள்வது அவசியம்.

 

நம் ஊரில் பொதுவாக இப்படி சர்க்கரை அளவு பரிசோதனை செய்யும் மையங்கள் நிறைய இடங்களில் இருக்கும்.

 

ஆனால் இன்றைய வித்தியாசமான சூழலில் அப்படி பரிசோதனை செய்வது பலருக்கும் ஈசியாக இருப்பதில்லை.

அப்படி பட்ட சூழலில் வீட்டிலேயே பரிசோதனை செய்ய க்ளுகோஸ் மீட்டர் பயன்படுத்தலாம்.

 

க்ளூகோஸ் மீட்டர்

உங்கள் டாக்டரின் ஆலோசனையுடன் உங்களுக்கு ஏற்ற க்ளூகோஸ் மீட்டர் வாங்கி அதில் இருக்கும் வழிமுறைகள் பின்பற்றி சோதனை செய்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக பின்பற்றப் படும் வழிமுறைகள் இது:

சோதனைக் கருவியைக் கையாளும் முன் கைகளைக் கழுவி, உலர வைக்கவும்.

 

விரலில் சோதிக்கும்போது, விரலின் ஒரு பக்கத்தைப் பயன்படுத்தவும். ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு விரல்களை சோதிக்கவும்.

 

விரலில் லேன்ஸால் குத்துவதற்கு முன், திடமான டேபிள் போன்ற இடத்தில கையை வைக்கவும். லேன்ஸை உறுதியாகப் பயன்படுத்துங்கள்.

 

விரலை மார்பின் நேர் மட்டத்தில் வைத்து மெதுவாக விரலைக் அழுத்தி, ஒரு துளி ரத்தத்தை சோதனைத் ஸ்ட்ரிப்பில் பட அனுமதிக்கவும்.

 

ஒவ்வொரு சோதனையையும் தொடர்ந்து இரத்த குளுக்கோஸ் வாசிப்பைக் கவனிக்கவும் பதிவு செய்யவும்.

 

எப்போது சோதனை செய்ய வேண்டும்?

பொதுவாக மருத்துவர்கள் மூன்று நேரங்களில் சர்க்கரை பரிசோதனை செய்ய பரிந்துரைக்கிறார்கள்:

காலை உணவிற்கு முன்:

காலையில் எதையும் சாப்பிடுவதற்கு அல்லது குடிப்பதற்கு முன் இருக்கும் இரத்த குளுக்கோஸ் அளவை இது கொடுக்கும்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.