(Reading time: 3 - 6 minutes)

சாப்பிடுவதற்கு முன்பு இரத்த குளுக்கோஸ் அளவை எடுத்துக் கொள்வது ஒரு அடிப்படை எண்ணை வழங்குகிறது. இது பகலில் உடலின் குளுக்கோஸ் செயல்முறைகள் பற்றிய தடயங்களை வழங்குகிறது.

 

உணவுக்கு முன்:

உணவுக்கு முன் இரத்த குளுக்கோஸ் அளவு குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் அதிக இரத்த குளுக்கோஸ் வாசிப்பு சர்க்கரையை நிர்வகிப்பதில் உடலில் இருக்கும் சிரமங்களைக் குறிக்கிறது.

 

உணவுக்குப் பிறகு:

உணவுக்குப் பிந்தைய சோதனை, உடல் உணவுக்கு எவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்பதையும், சர்க்கரை செல்களை நல்லபடியாக சென்று அடைகிறதா என்பதையும் பற்றி நமக்கு சொல்கிறது.

 

பெரும்பாலான மருத்துவர்கள் உணவுக்கு 2 மணி நேரம் கழித்து இந்த பரிசோதனையை செய்ய பரிந்துரைக்கின்றனர்.

 

சர்க்கரை அளவுகள்:

பரிசோதனைக்கு பிறகு சர்க்கரை அளவு எப்படி இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ள ஒவ்வொரு சோதனையின் நார்மல் அளவையும் தெரிந்துக் கொள்வது அவசியம். இதை உங்கள் டாக்டரிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.

 

பொதுவாக, பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் அளவீடுகள் இது:

காலை உணவிற்கு முன்:

70 – 100 – நார்மல் அளவு

 

உணவுக்கு முன்:

70 – 130 – நார்மல் அளவு

 

உணவிற்கு பிறகு:

140 க்கு கீழே – நார்மல் அளவு

நாம் இருக்கும் சூழலை அனுசரித்துக் கொண்டே ஆரோக்கியமாக வாழ்வதும் அவசியம். எனவே தேவைப்படும் போது உங்களுக்கு நீங்களே சர்க்கரை பரிசோதனை செய்துக் கொள்ள மறக்காதீர்கள்.

    

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.