(Reading time: 2 - 4 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - காபி இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி?

சோர்வு ஏற்படும் போது எனர்ஜி கிடைக்க காஃபின் நிறைந்த காபியை குடிப்பது மிகச் சிறந்த விரைவான தீர்வாக நம்மில் பலரும் நினைக்கிறோம். ஆனால் அது ஆரோக்கியமானது இல்லை.

நம் எனர்ஜியை அதிகரிக்க வேறு பல ஆரோக்கியமான வழிகள் உள்ளன.

 

ஒரு ஹெல்தியான சிற்றுண்டி முயற்சி செய்யுங்கள்

அடுத்த தடவை டையர்டாக உணரும் போது, காபிக்கு பதில் குறைந்த சர்க்கரை கொண்ட உணவு ஒன்றை தேர்ந்தெடுங்கள்.

இதுப்போன்ற உணவுகளை நம் உடல் மெதுவாக உறிஞ்சும். அதனால் நம் எனர்ஜி உடனே குறையாது.

கீரை மற்றும் பிற காய்கறிகள் மிக சிறந்த உணவாகும்.

 

நன்றாக – இடைவெளி விட்டு - சாப்பிடுங்கள்

சரியான நேரத்திற்கு சாபிடாமல், சரியாக சாப்பிடாமல் இருப்பது நம்மை டையர்டாக்கும்.

அதனால் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை உணவு உண்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

 

உடற்பயிற்சி

நடப்பது கூட நம் உடலுக்கு வேண்டிய சுறுசுறுப்பை கொடுக்கும்.

அதனால் காபியை தவிர்த்து சின்ன வாக் முயற்சி செய்துப் பாருங்கள்.

 

மூச்சு பயிற்சி செய்யுங்கள்

யோகாவில் இருந்து உலகம் கற்றுக்கொண்டிருக்கும் இந்த ஆரோயக்கியப் பயிற்சி நமக்கு புத்துணர்ச்சி கொடுக்க மிகவும் நல்லது.

 

தண்ணீர் குடியுங்கள்

பொதுவாக உடல் சோர்வு என்பதே நம் உடலில் தேவையான நீர் இல்லை என்பதன் அறிகுறி தான். எனவே நாள் முழுவதும் தொடர்ந்து தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ளுங்கள்.

 

இயற்கையுடன் இணையுங்கள்

மிகவும் குறைந்த நேரத்திற்கு என்றாலும் இயற்கையின் அருகே இருப்பது மக்கள் ஆற்றலை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.