(Reading time: 2 - 4 minutes)

Health Tip #18 - கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பை குறைப்பது எப்படி?

ரியான உணவுகளை சரியான அளவில் சாப்பிட்டால், உடலில் கொழுப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். கொழுப்பு  கூடாமல் தடுக்கும் சில உணவுகள் இங்கே உங்களுக்காக

1. பூண்டு

பூண்டில் இருக்கும் சல்பர் தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து உடலை ஒல்லியாக்க உதவுகிறது.

Garlicபூண்டில் கிருமிகளை அழிக்கும் ஆன்டிபேக்டீரியல் இருப்பது கூடுதல் நன்மை.

2. ஆப்பிள்

ஆப்பிளின் தோலில் இருக்கும் பெக்டின் எனும் பொருள் நம் உடலில் உள்ள செல்களில் இருந்து kozhuppai உறிஞ்சுவதுடன் நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்கவும் உதவுகிறது.

3. முட்டைக்கோஸ்

இதை சமைத்து சாப்பிடாமல், தண்ணீரில் நன்கு கழுவி பச்சையாகவும் சாப்பிடலாம்.

4. பாதாம்பருப்பு

பாதாமில் உள்ள ஒமேகா 3, ஆல்பா லினோலினிக் கொழுப்பை கரைக்க உதவுகிறது.

எனவே சிறிதளவு பாதாம் உட்கொள்வது கொழுப்பை குறைக்கவும், எடையை குறைக்கவும் உதவுகிறது.

5. ஏலக்காய்

ஏலக்காய் ஒரு சிறந்த செரிமான (digestive) பொருள். இது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.

ஏலக்காயை உணவில் தினமும் சேர்த்துக் கொள்வது நல்லது.

karuveppilai6. பீன்ஸ்

பீன்ஸ் குறைந்த கொழுப்பையும் அதிக அளவு பைபர் எனும் நார்ச்சத்தையும் கொண்ட உணவு.

7. மஞ்சள்

மஞ்சளில் பலவிதமான மருத்துவ குணநலன்கள் இருக்கின்றன.

மஞ்சளை உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

8. ஓட்ஸ்

ஓட்ஸ் மெதுவாக செரிமானமாவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றுள் இன்சுலினை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கூடுதலாக கொழுப்பை துரிதமாக கரைக்கவும் உதவுகிறது.

9. கறுவேப்பிலை

கறுவேப்பிலை உடலில் உள்ள கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது.

10. கிரீன் டீ

appleகிரீன் டீயில்பல்வேறு நல்ல குணநலன்கள் உள்ளன.

இது உடலில் தங்கி இருக்கும் கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.

11. கடுகு எண்ணெய்

இதில் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது.

இது ஒரு நல்ல ஆன்டி ஆக்சிடென்ட்டும் கூட.

12. தண்ணீர்

கொழுப்பை கரைக்க தண்ணீர் உதவுவதால், தேவையான அழவு தண்ணீர் அருந்துவது அவசியம்

13. மோர்

பொதுவாக பால் பொருட்களில் கொழுப்பு அதிகமாக இருக்கும். ஆனால் மோரில் கொழுப்பு குறைந்த அளவிலேயே இருக்கிறது.

எனவே மோரை பருகினால் உடலுக்கு தேவையான ஊட்டசத்து குறைந்த கலோரியிலேயே கிடைக்கும்.

14. மிளகாய்

பொதுவாக கேப்சைசின் இருக்கும் உணவு பொருட்கள் உடலில் உலா தேவையற்ற கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டவை.

அன்றாடும் நாம் பயன்படுத்தும் மிளகாயில் இந்த கேப்சைசின் இருக்கிறது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.