(Reading time: 1 - 2 minutes)

Health Tip #19 - நடப்பதினால் ஏற்படும் நன்மைகள்

walking

ன்றைய காலக் கட்டத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு உடல் பயிற்சி செய்வது மிகவும் இன்றியமையாததாகி விட்டது.

ஆனால் நம்மில் பலருக்கும் உடல்பயிற்சிகள் செய்ய நேரமில்லை அல்லது தயக்கம் உண்டு....

நடைபயிற்சி என்பது எல்லோரும் எளிதாக செய்யக் கூடியது.

இளம் வயதிலேயே தினமும் நடப்பதை பழக்கமாக்கி கொள்வதால் பல நன்மைகள் உண்டு. அவற்றுள் சில நன்மைகளை இங்கே பார்ப்போம்.

நடைப் பயிற்சியின் நன்மைகள்:

  1. உடல் எடை குறைய உதவுகிறது.
  2. நல்ல தூக்கம் பெற உதவுகிறது.
  3. ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்தை குறைக்கிறது
  4. மன அழுத்தம், மன உளைச்சல்களை குறைக்க உதவி நீண்ட நாட்கள் இளமையுடன் வாழ உதவுகிறது.
  5. சீரான வேகத்தில் நடப்பது தசையை வலுவாக்கி தசைகளின் தாங்கும் சக்தியை அதிகப்படுத்துகிறது.
  6. உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து, மூட்டு வலி போன்ற முதுமை நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
  7. ஆரோக்கியம் மட்டுமில்லாமல், நடப்பது கால்களுக்கு அழகிய வடிவத்தையும் கொடுத்து, அழகு மேன்மையுற உதவுகிறது.
  8. கர்ப்ப காலத்தில் நடை பயிற்சி செய்வது கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
  9. கர்ப்ப கால சர்க்கரை வியாதி (Gestational diabetes) வராமல் தடுக்க உதவுகிறது.

டை பயிற்சி போன்ற சுலபமான பயிற்சி வேறில்லை. எனவே தினமும் நடப்போம்... உடல் ஆரோக்கியத்தை காப்போம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.