(Reading time: 2 - 4 minutes)

Health Tip # 51 - 'எள்'ளின் நன்மைகள்

Sesame

'எள்'ளின் நன்மைகள்

ள் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ள்ளில் புரதம், கால்ஷியம், இரும்பு, மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் என பலவகையான சத்துக்கள் உள்ளன. மேலும் செம்பு, செலினியம் போன்ற நுண் சத்துக்களும், தாவர கொழுப்புகள் (phytosterols) மற்றும் தாவர ஈஸ்டிரோஜெனும் (phytoestrogens) உள்ளன.

முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனைகளை தீர்க்க எள் உதவுகிறது.

ள்ளில் இருக்கும் செலினியம் பொடுகு பிரச்சனையை குறைக்கும் என்றால் அதில் இருக்கும் கால்சியம், இரும்பு மற்றும் புரதம், முடி நன்கு வளர உதவும்.

சைவ உணவு உண்பவர்களுக்கு தேவைப்படும் புரதம் எள்ளில் நிறைந்து இருக்கிறது.

ள் பெண்களுக்கு மிகவும் நல்லது

ழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் தடை, மாதவிடாய் நேரத்தில் உண்டாகும் வலி போன்றவற்றிருக்கு எல் மிக சிறந்த நிவாரணி ஆகும்

மேலும் எள்ளில் இருக்கும் சத்துக்களும் பெண்களுக்கு அவசியம் தேவை படும் சத்துக்கள் ஆகும்.

மாதவிடாய் நிற்கும் நேரத்தில் ஏற்படும் எலும்பு சிதைவை தடுக்கவும் எள் உதவும்.

ருவுற்றிருக்கும் நேரத்தில் எள்ளை தவிர்ப்பது நல்லது.

ண்களுக்கும் உதவும் எள்

ள் பெண்களுக்கு மட்டும் உதவும் உணவு என்ற எண்ணம் பலரிடையே இருக்கிறது. ஆனால் பெண்களை போலவே ஆண்களுக்கும் எள் பல விதத்தில் பயன் தருகிறது.

ள்ளில் எண்ணெய் சத்தும் நார் சத்தும் இருப்பதால் மலச்சிக்கலை போக்க அது ஒரு சிறந்த உணவாகும்.

யுர்வேதம் சொல்லும் 'oil pulling' எனப்படும் பழக்கம் இப்போது பல நாடுகளிலும் பிரபலமாகி வருகிறது. எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூனை வாயில் ஊற்றி, சில நிமிடங்கள் வைத்து நன்கு கொப்பளித்தால் பல் மற்றும் ஈறு சம்பந்த்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்லது.

இதை நல்லெண்ணெய் அல்லாமல் எள்ளையே வாயில் இட்டும் செய்யலாம்.

 


சின்னதாக இருக்கும் எள்ளில் தான் எத்தனை எத்தனை பயன்கள்!

சிறு வயது முதலே எள்ளை குழந்தைகளுக்கு கொடுத்து பழக்குவோம். ஆரோக்கியமான புதிய தலைமுறையை உருவாக்குவோம்!

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.