(Reading time: 4 - 8 minutes)

03. நலமறிய ஆவல்..!! - வசுமதி

Parotta

 

"ரு சான் வயிறு இல்லாட்டா, இந்த உலகில் ஏது கலாட்டா..??

உணவு பஞ்சம் வராட்டா, நம் உசுரை வாங்குமா பரோட்டா..?? "

இந்த பாட்டு எந்த படத்துல வருதுன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா..??

இந்தப் பாட்டை, 1951'ம் வருடம் வெளியான "சிங்காரி" திரைப்படத்துக்காக எழுதியவர் கவிஞர் தஞ்சை இராமையாதாஸ்..

பலருக்கு பரோட்டா சாப்பிட்டால்தான் தூக்கமே வரும். அந்த அளவுக்கு பரோட்டாவுக்கு அடிமையானவர்கள் பலர் நம்மில் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அதன் சுவை தான்.

பரோட்டாவை பல ஊர்களில் பலவிதமாகச் செய்கிறார்கள். மதுரை பக்கம் போனால் சும்மா மெத்மெத்தென்று அடித்த மாவில் செய்த சுவையான பரோட்டா கிடைக்கும். விருதுநகர் பக்கம் சென்றால் எண்ணெயில் சுட்ட பொறித்த பரோட்டா கிடைக்கும். அப்படியே செங்கோட்டை பார்டர் கடைக்குச் சென்றால் கோழிக்குழம்புடன் அள்ளி அள்ளி விழுங்கத் தோன்றும் சுவையான பரோட்டா கிடைக்கும்.

பரோட்டா, நாண் மாதிரியான ஐட்டங்கள் ஹோட்டல்லயோ இல்லை வீட்டுலயோ செஞ்சு சாப்பிடுறோம். அப்படி சாப்பிடுறப்ப பரோட்டாவை கொஞ்சமா வச்சுக்கிட்டு சைடு டிஷ்ஷை அதிகமா வர்ற மாதிரி வச்சு சாப்பிட்டா செரிமான பிரச்சனை இருக்காது.

பேக்கரி ஐட்டங்கள் எல்லாமே ரொம்ப குறைவா சாப்பிட வேண்டிய ஐட்டங்கள். நீங்க என்ன வயதினர், என்ன மாதிரியான உடல் உழைப்பு இருக்குங்கிறதை பொறுத்து இந்த மாதிரி உணவுப் பொருட்களை நீங்க சேர்க்கவோ குறைக்கவோ செய்யணும்.

உடல் உழைப்பு குறைஞ்சாலோ, வயதானாலோ இந்த பொருட்களுக்கு குட்பை சொல்ல ஆரம்பிக்கிறது ஆரோக்கியமா வாழுறதுக்கு உதவியா இருக்கும்.

ஒரு நார்மலான உடல்நிலையில இருக்கிறவங்க முழுக்க முழுக்க தவிர்க்கணும்ங்கிற அவசியம் இல்லை. ரொம்ப ரேர்ராக எடுத்துக் கொள்ளலாம்..ஆனால் முடிந்த அளவிற்கு இரவில் எடுத்துக்கொள்ள வேண்டாம்..செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது..

டயாபடிஸ் உள்ளவங்க மைதாவை தவிர்க்கிறது ரொம்பவே நல்லது. மைதா தயாரிப்பில பயன்படுத்துற கெமிக்கல்ஸ் இன்சுலின் சுரக்கிறதை குறைக்கிறதா சொல்றாங்க.

டுத்து பேக்கரி ஐடம்ஸ்க்கு வருவோம்... அதுவும் மைதாவுல செய்யறது தான்...

கடந்த பத்து, இருபது ஆண்டுகளில் நம்மவர்களின் உணவுப் பழக்கத்தில் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பு காலை டிபன் என்றாலே இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் கையறாக்கள்தான் இருக்கும். ஆனால், இன்றோ அத்தனை உணவுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணிக்கு வந்துகொண்டிருக்கிறது பிரட் வகைகள்.

ஒரு காலத்தில் காய்ச்சல் வந்தால் சாப்பிடலாம் என்றிருந்த இந்த பிரட், இன்று அன்றாடம் சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாக மாறி விட்டது. விளைவு, பெரிய நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, சிறிய நகரங்களிலும் சக்கைப் போடு போட்டு வருகின்றன பேக்கரிகள்.

பிரட்கள், பலவிதமான கேக்குகள், பஃப்ஸ், சான்ட்விச், சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் என பலவகையான உணவுப் பொருட்களை விற்கும் இடமாக இந்த பேக்கரிகள் இருக்கின்றன.

இயந்திரகதியான இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பல சமயங்களில் வீட்டில் சமைக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே, பேக்கரியிலிருந்து பிரட் வாங்கி சாப்பிடும் பழக்கத்துக்கு பல்வேறுவிதமான மக்கள் ஆளாகி வருகிறார்கள்.

இதனால் நகர்ப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் பேக்கரி தொடங்கி விட்டனர். மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்து பேக்கரியைத் தொடங்கினால், விற்பனை களைகட்டும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.                   

மைதா மாவு, சர்க்கரை, நெய் அல்லது வனஸ்பதி, ஈஸ்ட் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு பிரட், பிஸ்கெட், கேக் போன்றவற்றைத் தயாரிக்க வேண்டும். இதனோடு கைதேர்ந்த மாஸ்டர்களைக் கொண்டு  பஃப்ஸ், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை சைடு பிஸினஸாக விற்றுக் கொள்ளலாம்.

இது பேக்கரி கடை வைத்து நடத்துபவர்களுக்கு கொள்ளை லாபம் அளிக்கக் கூடியது.. உண்ணும் நமக்கு..??

ஸ்கூல் முடிந்து வரும் பிள்ளைகளுக்கு பேக்கரி ஐட்டம்களை வாங்கி தரும் எத்தனையோ பேர் நம்மில் இருக்கிறோம்..ஒரு நாளாவது இந்த உணவுகளை எப்படி செய்கிறார்கள் என்று பார்த்திருக்கின்றோமா..??

பிரட்டையே எடுத்துக்கொள்ளுங்கள்.. இரெண்டு மூன்று நாட்கள் ஆன பிரெட் ரொட்டி போல் ஆகிவிடும்.. இதனை பொடித்து சிறிது தண்ணீரும் வினீகரும் சேர்த்தால் மிருதுவாகிவிடும்.. இந்தக் கலவையை பிரெட் மாவில்(Dough) கலந்து மீண்டும் பேக் (Bake)  செய்கிறார்கள்.. இவ்வாறு செய்யும் பிரட் ரொம்ப மிருதுவாக இருக்கும்...

அடுத்த எபிசோட் நம்ம எல்லோருக்கும் பிடித்த சில பேக்கரி ஐட்டம்ஸ் பற்றி பார்ப்போம்...

கமெண்ட் செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த பேக்கரி ஐட்டம்களை குறிப்பிடுங்கள்

நலமறிய ஆவல்...

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1112}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.