(Reading time: 5 - 10 minutes)

“சூப்பர் தாத்தா..அப்புறம் ஏன் தாத்தா சில மரத்துல பதநீர் எடுக்காமல் விட்டிருக்கீங்க..??”

“அதுவந்து.. இந்த மரத்தில் இருந்து எடுக்கும் பதநீரை விட இந்த மரத்து நுங்கு டேஸ்ட்டா இருக்கும் அதான்..”

“ஹை..அப்படீனா எனக்கு நுங்கு பறிச்சி தாங்க..”,துள்ளினாள் சுட்டி..

“குட்டிப் பொண்ணு.. நுங்கு சாப்பிட்டா உனக்கு பிடிச்ச பிஷ் சாப்பிட முடியாது.. உனக்கு சாயங்காலம் பறிச்சுத் தர சொல்றேன்..”

அவரை சற்று சந்தேகமாக பார்த்த குட்டி, தன் பிஞ்சு விரல்களை நீட்டி, ”ப்ராமிஸ்..??”,என்றது..

அவளை ஏமாற்ற விருப்பமில்லாதவரும் அவளது கையின் மேல் தன் கைகளை வைத்தார்..

தாத்தா ப்ராமிஸ்ஸை காப்பாற்றினாரா என்று அடுத்த பதிவில் பார்ப்போம்..

இன்றைய ஹெல்த் டிப்ஸ்..

  1. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்..
  2. பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்..வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும், உடல்குளிர்ச்சி பெறும்.. ஊட்டம் பெறும்.. வயிற்றுப் புண் நிச்சயம் ஆறிவிடும்..
  3. பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும்.. ஐந்தாறு முறை தடவ வேண்டும்..
  4. வெல்லம் அயன்ச்சத்து (iron)  மிகுந்தது.. சோகை நோய்களுக்கு மருந்து.. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள்.. முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்றும் சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாவதை  ‘பனங்கற்கண்டு’ எனப்படும்.. இதற்கு மருத்துவ நிறைய குணங்கள் உள்ளன..
  5. பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது.. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது.. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது..

நலமறிய ஆவல்...

Episode # 06

Next episode will be published on 29th June. This series is updated fortnightly on Thursdays.

{kunena_discuss:1112}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.