(Reading time: 4 - 8 minutes)

06. பனை மரம்..!! - வசுமதி

Palm tree

திண்டுக்கல் டூ மதுரை ஹைவேஸ்..

"ப்பா.. நம்ம ஊருக்கு ஏன்மா பனையூர்னு பேர் வந்துச்சு..??",சுட்டிப் பெண் ஷன்வி..

"நம்ம ஊர் முழுதும் பனை மரங்கள் நிறைந்திருந்ததால் அந்த பெயர் வைத்திருக்கிறார்கள்.."

"நம்ம மாமா ஊருக்கு புன்னையடினு ஏன் வெச்சாங்க..??"

"நம்ம மாமா ஊர் எல்லைல ஒரு பெரிய புன்னை மரம் இருந்துச்சாம்..அதான்.."

"அப்பா அப்புறம்..."

"குட்டிமா.. அப்பா டிரைவ் பண்ணிட்டு இருக்காங்கள்ல..பாட்டி உன் சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன் வா.."

"ஓ கே பாட்டி..",என்று அவரிடம் தாவியவள், "ஏன் பாட்டி.. ட்ரீஸ் பெயரை ஊருக்கு வெச்சிருக்கறாங்க..??"

"அந்த காலத்துல இருந்த தாத்தா பாட்டிங்க ஒவ்வொரு இடத்துல இருக்கற அடையாளத்தை வைத்து ஒவ்வொரு ஊருக்கும் பெயர் வைத்தார்கள்.. உதாரணத்திற்கு புன்னை மரங்கள் நிறைந்த இடங்கள் புன்னைகாடு, புன்னையடி.. மாமரங்கள் நிறைந்த ஊருக்கு மாவிளை,மாவடுபுரம்.. இது போலவே சில காட்சிகளைக் கண்டும் அவற்றை ஊர் பெயராக வைத்தார்கள்..புலி அதிகமாக ஊருக்குள் புகுந்ததால்  புலியிறங்கி..",என்றார்..

"பாட்டி..நம்ம ஊர் பேரும் பனையூர்.. என் பிரென்ட் நிக்கியோட ஊர் பேரும் பனையூர்.. ஏன் பாட்டி அப்படி..??"

"அது நம்ம ஊருல அதிகமா பனை மரங்கள் இருந்துச்சு குட்டி.. அதான் நெறையா ஊருக்கு அதான் பனை மரத்தோட பெயரையே நெறையா ஊருக்கு வெச்சுட்டாங்க.."

"நெறையா ஊருக்கா..?? எப்படி..??"

"குளச்சல் அப்படிங்கற ஊருக்கு பக்கத்துல இருக்கற ஒரு ஊருக்கு குறும்பனைனு பெயர்.. கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஊருக்கு பனையம்பாளையம்..  கேரள எல்லையிலுள்ள பனச்சமூடு..கருங்கல் அருகில் உள்ள கருக்குபனைவிளை, பனையபுரம்.. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டார் சந்தையின் அருகில் அருகில் உள்ள வடலிவிளை (வடலி என்பது பருவம் வராத பனை)  விரிகோட்டின் அருகிலுள்ள  பனம்குழி.. இப்படி நிறையா சொல்லலாம் குட்டிமா.."

"ஹோ.. அவ்ளோ பேமஸான மரமா பனை மரம்..??"

"ஆமாம் குட்டி..பனை மரம் நம் கிராமப்புறங்களின் கலாச்சாரத்தோடும் பொருளாதாரத்தோடு பல தலைமுறைகளாக பின்னிப் பிணைந்துள்ளது..தமிழரின் அடையாளமும் இந்த பனை தான்.."

"அடையாளமா..??எப்படி..??"

"சில நூற்றாண்டுகளுக்கு முன் பனை வெற்றி, அமைதி, வளமை ஆகியவற்றை குறிக்கும் சின்னமாக விளங்கியது.. சேர நாட்டு அரசர்கள் பனையின் பூக்களை மலையாகி கழுத்தில் போட்டுக்கிட்டாங்கன்னு சொல்லுவாங்க.."

"பனை மரம் எப்படி இருக்கும் பாட்டி..??"

தன் போனில் இருந்த ஒரு பனைமரத்தின் போட்டோவை காட்டினார்..

"என்ன பாட்டி இது..?? இவ்ளோ ஹைட்டா இருக்கு..??"

"இது சின்ன மரம் தான் குட்டிமா.. கிட்டத்தட்ட இது 30 மீட்டர் வரை வளரும்.."

"அவ்ளோ ஹைட்வா..?? அதுக்கு நம்ம ரோஜா செடிக்கு போடற மாதிரி உரமெல்லாம் போடணும்ல பாட்டி..?? இவ்ளோ ஹைட்டா வளர தண்ணீர் நிறையா ஊத்தணும்ல பாட்டி..?? அப்போதானே அது சீக்கிரம் பிக் ஆகும்.."

"இல்லை தங்கம்.. பனை மரம் வளருவதே வறட்சியான மழை வளம் குறைந்த இடத்துல தான்..நம்ம என்னதான் தண்ணீர் விட்டாலும் அது கொஞ்சம் கொஞ்சமாகத் தான் வளரும்.. பனை மரம் ஒன்று முழுதாக வளர சுமார் பதினைந்து வருடங்கள் ஆகும்.."

"அவ்ளோ வருஷமா..??"

"வளர்வதற்கு சில ஆண்டு காலம் ஆனாலும் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் வரை உறுதியுடன் நிற்கும்.."

"இவ்ளோ ஹைட்டா வளர்ந்தா எப்படி பாட்டி ஷேடோ விழுமா..??"

"விழுமடா.. ஆனால் அது ரொம்ப சின்னதா இருக்கும்.."

"அது வளர்வதற்கு ரொம்ப வருடமாகிறது..பனை மரத்து ஷேடோ சின்னதுனு சொல்ரீங்க..இந்த மரத்தால் அப்படி என்னதான் யூஸ்..??"

"பனையின் அடி முதல் நுனிவரை அணைத்தும் உபயோகமானது..நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் என பனைமரத்தின் ஒவ்வொரு பகுதியையும் நம் தேவைக்காக பயன்படுத்தலாம்.. குட்டிமா வீடு வந்திருச்சு பாரு..பானையை பற்றி அப்புறம் சொல்றேன்.."

(குட்டி வாலுக்கு துணையாக நாமும் சிறிது காத்திருப்போம்..)

இன்றைய ஹெல்த் டிப்ஸ்..

  • நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும்.. எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும்..நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்..
  • பனம்பழம் சிறந்த சத்துணவாகும்.. உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது.. சுட்டு சாப்பிடலாம்..
  • கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்..
  • பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும்.. புஷ்டி தரும்.. முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது..
  • பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும்.. முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும்..
  • பணங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்..

வணக்கம் நண்பர்களே.. !!

இன்னும் இரண்டு அல்லது மூன்று எபிகளுக்கு பனை மரத்தை பற்றி பார்ப்போம்..

நன்றி..!!

நலமறிய ஆவல்...

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1112}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.