(Reading time: 8 - 15 minutes)

05. நலமறிய ஆவல்..!! - வசுமதி

pani puri

"ம்மா... டைம் ஆச்சு..கடையை மூடிடுவாங்க.. என் வாட்சை பார்த்தீங்களா..??"

"அந்த டேபிள் மேல பாரும்மா..."

"அப்பா.. நான் ரெடி.. போலாம் வாங்க..??" ,பரபரத்துக்குக் கொண்டிருந்தாள் அவள்..

வெயிட்..வெயிட்..இவ்ளோ ஆர்வமா புள்ள எங்க கெளம்பி போகுதுனு தானே பார்க்கறீங்களா...??  எல்லாம் பானி பூரி கடைக்கு தான்...

ன் ஹெச் 47,வரிசையாக பாஸ்ட் புட் கடைகள்…

"அப்பா.. அந்த அஞ்சாவது கடைல தான் சூப்பரா இருக்கும்..வாங்க..",என்றபடி தந்தையை இழுத்துக்கொண்டு கடையை நோக்கி செல்கிறாள்..

"பையா..ஏக் பானி பூரி.." (அவளுக்கு தெரிந்த ஹிந்தி அவ்ளோதான்..)

பையா என்று அழைக்கப் பட்ட அந்த வட நாட்டுக்கார பையன் அவளிடம் ஒரு தட்டை நீட்டுகிறான்.. அதில் பூரிகளின் மேல் ஒரு ஓட்டையைப் போட்டு, அதற்குள் சிறிது மசாலாக் கலவையைத் திணித்து, அதற்கான ரசத்தில் (பானி) தோய்த்து வைக்க, நொறுங்கும் சப்தத்துடன், காரமும் லேசான புளிப்புச் சுவையுமாக நாக்கு ஒவ்வொன்றாக உள்ளே தள்ளிக்கொண்டே இருந்தது.

இவ்வாறு ஒரு நான்கைந்து பூரிகளை உள்ளே தள்ளியிருப்பாள்.. அவள் உண்ணும் அழகை அதுவரை ரசித்துக்கொண்டிருந்த அவளின் அப்பா,"குட்டிமா.. அந்த பையன் கையைப் பாரு",என்றார்..

எதுக்குப்பா என்று அந்த பையனின் கைகளை நோக்கியவளின் வாயிலிருந்த பூரி பொத்தென்று தரையில் விழுந்து விட்டது அடுத்த நொடி... இருக்காதா பின்ன.. அந்த பையன் தன் கைகளை கொண்டு தன் தலையை சொரிந்து கொண்டும் ஸ்டூலின் மேல் அப்பியிருந்த குப்பைகளையும் அல்லவா துடைத்துக் கொண்டிருந்தான்..

அவள் அப்பா அவனிடம்,"தம்பி,இந்த சட்னி எப்போ செஞ்சீங்க...?? ரொம்ப டேஸ்ட்டா இருக்கு.. இரண்டு நாளைக்கு முன்னாடி வெச்ச மீன் குழம்பு மாதிரி.."

வாயெல்லாம் பல்லாக அவனும்,"சார்..நாங்க பானியையும்,சட்னியையும் ஒரு வாரத்துக்கு செஞ்சு வெச்சுடுவோம்.. நாளாக நாளாக தான் அதுக்கு டேஸ்டே ",வெள்ளந்தியாக..

அந்த பெண் இப்பொழுது மிச்சமிருந்த  பூரியையெல்லாம் அவன் கையில் ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு திரும்பினாள்.. சும்மா இல்லைங்க தன் தகப்பனை இழுத்துக் கொண்டும் இனி பாஸ்ட் புட் கொறிக்க மாட்டேன் என்ற சபதத்துடனும்..

அந்த பெண்ணை போல் பலர் நம்மிடையில் உள்ளோம்.. எப்பொழுது நாம் ஒரு கடையின் கிச்சனுக்குள் நுழைகின்றோமோ அப்பொழுது நாம் டாட்டா காட்டி விடுவோம் அக்கடைக்கு..

இன்றைக்கு நாம் பார்க்க போவது பாஸ்ட் புட் பற்றி.. முக்கியமாக பானி பூரி..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெகுவாக ஈர்க்கும் முக்கிய நொறுக்குத்தீனியாகிப் போனது பானி பூரி. எலுமிச்சை, உப்பு, பச்சைமிளகாய் கலந்த எந்த உணவாக இருந்தாலும் அதன் சுவை நம்மை ஈர்த்துவிடும். அந்த வகையில் இன்றைக்குத் தமிழக நொறுக்குத்தீனிகளில் பானி பூரிக்கே முதல் இடம்.

பானி பூரியின் பிறப்பு எங்கு தெரியுமா..??

பானி பூரி தோன்றிய இடம் அன்றைய மகத ராஜ்யம்... இன்றைய தெற்கு பீஹார்" என்கிறார்கள் உணவியல் ஆய்வாளர்கள். அந்தப் பகுதியில் இதற்கு "கோல் கப்பா" (Gol Gappa) எனப் பெயர். ஆனால், இது வாரணாசியில் இருந்து வந்த உணவு வகை என்று சொல்பவர்களும் உண்டு.  தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் நேபாளில் இதை 'பானி பூரி’ (Pani puri) என்கிறார்கள். கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் இதற்கு வெவ்வேறு பெயர்கள்... 'புச்கா’ (Puchka), 'கோல் கப்பே’ (Gol Gappe) `பானி கி பத்தாஷே’ (Pani ke patashe), 'பகோடி’ (Pakodi), 'பத்தாஷி’ (Patashi), 'கப் சப்’ (Gup chup), 'புல்கி’ (Phulki) ... இப்படி நீள்கிறது பெயர்ப் பட்டியல். ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வோர் சுவை...

கடைகளில் கிடைக்கும் பானிகளுக்கான பூரிகளை யார் செய்கிறார்கள்

டைகளில் கிடைக்கும் பானிகளுக்கான பூரிகளை ஒவ்வொரு கடைக்காரரும் தனித்தனியே செய்வதில்லை. பானி பூரி கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து தொங்கவிடப்பட்டிருக்கும் சின்னஞ்சிறு பூரிகள் மொத்தமாக வாங்கப்படுபவை. அவை தயாரிக்கப்படும் இடம் வேறு. ஆக, பானி பூரி ஆரோக்கியமாகத்தான் தயாரிக்கப்படுகிறதா என்பது நம் முன்னே நிற்கும் மிகப் பெரிய கேள்வி. 

பானி பூரி சாப்பிடுவதால் உடலுக்கு சத்துக்கள் ஏதாவது கிடைக்குமா?

ன்கு பொரிக்கப்பட்ட சிறிய பூரிகள், விதவிதமான சுவைகளில் பானி, சட்னி, பச்சை மிளகாய், வெங்காயம், கெட்டித் தயிர், உருளைக்கிழங்கு, சாட் மசாலா... என நம் நாக்கில் ஒரு நிமிடம் எச்சில் சுரக்க வைக்கும் பானி பூரியின் சுவைக்கு ஈடு கிடையாது. பலவித சுவைகளை உள்ளடக்கியது.

சுத்தமான எண்ணெயில் பொரிக்கப்பட்ட பூரி உடலுக்கு உகந்தது (எப்பொழுதாவது உட்க்கொண்டால்)... இதில் அதிக கலோரி இருந்தாலும் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்து கொண்டது.. அதோடு உடனடி எனர்ஜி தரக்கூடிய புரதச்சத்து மிகுந்த உணவு.

ஆனால்,  இதில் சேர்க்கப்படும் கெட்டித் தயிர் மற்றும் சோடியம் உப்பை அதிக அளவில் எடுத்துக்கொள்ளக் கூடாது. தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்; அது, நோய்கள் பல வருவதற்கு வழிவகுக்கும்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.