(Reading time: 8 - 15 minutes)

கை கழுவி உண்டால் சுத்தமாக உணவை உட்கொள்கிறோம் என்று அர்த்தமா..??

`டைக்காரர்கள், பூரியைப் பெரும்பாலும் தங்கள் விரல்களால் உடைக்கிறார்கள்; அதற்குள் மசாலாவை வைத்து, பானியில் முக்கித் தருகிறார்கள். அவர்களின் கை விரல்களின் நகத்தில் படிந்துள்ள அழுக்குகளும், கையில் உள்ள அழுக்கும் பானியிலும் ஒட்டிக்கொள்ளும். மேலும், கடைக்காரர்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்கவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. சுத்தம் இல்லாமல் பரிமாறப்படும் பானி பூரியைச் சாப்பிடுவது, வயிற்றில் புழுக்களை உற்பத்திசெய்ய வழிவகுக்கும். அவர்களின் கைகளில் பாக்டீரியாத் தொற்று இருந்தால் அவை நமக்கு வாந்தி, வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும் மேலும், ஹெபடைடிஸ் ஏ உண்டாவதற்கான அபாயமும் இருக்கிறது.

அதேபோல அந்தச் சின்னஞ்சிறு பூரியைத் தயாரிக்கும் எண்ணெய் எந்த அளவுக்குச் சுத்தமானது என்பது நமக்குத் தெரியாது. மீண்டும் மீண்டும் பயன்படுத்திய எண்ணெயில் பொரிக்கப்பட்ட பூரியை எடுத்துக்கொண்டால், உடலில் கெட்ட கொழுப்பு சேரும். இது புற்றுநோயை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது.

பானியில் உள்ள தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால், அதுவும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.  அதோடு, வீட்டில் தயாரித்தாலும் இந்த உணவை மாதம் ஒரு முறை எடுத்துக்கொள்வதே சிறந்தது…

பானி பூரியில் சோடியம் அதிகம் உள்ளது.. பூரி மொறுமொறுவென வர இது முதன்மையான காரணம்.. அதிக அளவு சோடியம் நிறைந்த எந்த உணவையும் முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது. 

பானி பூரி தயாரிக்கும் முறை..

தேவையானவை: 

மைதா - 1 கப், ரவை - 50 கிராம், தண்ணீர், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

பானிக்கு: 

புதினா - 1/2 கட்டு, கொத்தமல்லித் தழை - 1/2 கட்டு, பச்சைமிளகாய் - 4, வெல்லம் - 50 கிராம், புளி - 50 கிராம், சீரகத் தூள் - 1/2 ஸ்பூன், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

பூரிக்குள் வைக்க: 

உருளைக்கிழங்கு - 2, சீரகத் தூள் - 1/2 ஸ்பூன், மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

மசாலா: உருளைக்கிழங்கை வேகவைத்து, நன்கு உதிர்த்துக்கொள்ளவும். அத்துடன் சீரகத்தூள், உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து மசாலா செய்து வைத்துக்கொள்ளவும். 

பூரி செய்வதற்கு: மைதா, ரவை, தண்ணீர், உப்பு போன்றவற்றைச் சேர்த்து, மாவைப் பிசைந்து, அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சிறிது நேரம் ஊறவைக்கவும். சிறிது நேரம் கழித்து அந்த உருண்டைகளைத் தேய்த்து வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தேய்த்த உருண்டைகளை சிறு பூரிகளாகப் பொரிக்கவும். பூரி உள்ளங்கைக்குள் கொள்ளும் அளவுக்கு சிறியதாக இருக்க வேண்டும். 

பானிக்கு: புளியைத் தண்ணீரில் கரைத்து, வடிகட்டவும். பிறகு வெல்லத்தை அதனுடன் சேர்த்து நன்கு கரைக்கவும். அதனுடன் புதினா, கொத்தமல்லித் தழையை அரைத்துச் சேர்க்கவும். பிறகு, பச்சைமிளகாய், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து புளித்தண்ணீருடன் சேர்த்துக் கலக்கவும்.

பூரியில் மசாலாவை வைத்து, பானியில் தோய்த்து எடுத்துப் பரிமாறவும். 

பானி பூரி... சுவை மிகுந்தது. அது சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் உடலுக்குக் கேடு விளைவிக்காது. ஆனால், பானி பூரியையும் அளவோடு சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது!

இன்றைய டிப்ஸ்..

*** சாம்பார் தண்ணீராக இருந்தால், பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் சேர்க்கலாம்.சாம்பார் கெட்டிப்படுவதுடன் சுவையும் கூடுதலாக இருக்கும்..

*** வெங்​கா​யத் தின் மீது லேசாக எண்​ணெய் தடவி சற்று நேரம் வெயி​லில் காயவைத்துப் பின் முறத்​தில் போட்​டுப் புடைத்​தால் எளி​தாக மேல் தோல் அகன்​று​வி​டும்.

*** சாப்​பாட்டு பொட்​ட​லம் கட்​டப் போகி​றீர்​களா?​ சாப்​பாட்​டைப் பொட்​ட​ல​மாக கட்​டும்​போது வாழை இலையை பின்​பு​ற​மா​கத் திருப்பி தண​லில் லேசா​கக் காட்​டி​ய​பின்​னர் கட்​டி​னால் இலை கிழி​யா​மல் இருக்​கும்.

*** ன்னீர் மசாலா செய்யும்போது பன்னீரை வறுத்த உடன் உப்புத் தண்ணீரில் சிறிது நேரம் போட வேண்டும். பன்னீர் பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.

*** ப்பாத்திக்காக கோதுமை பிசையும்போது வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து கொஞ்ச நேரம் ஊறவைத்து பிறகு சப்பாத்தி செய்தால் மென்மையாக பூப்போல இருக்கும்.

நலமறிய ஆவல்...

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1112}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.