(Reading time: 6 - 11 minutes)

தொடர் - நலமறிய ஆவல்..!! - 12 - பழைய சோறு - வசுமதி

pazhaiya-saatham

நாம் இப்பொழுது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருக்கிறோம்..வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் வந்து விட்டன..

கடிதாசிகள் குறுஞ்செய்திகளாக மாறியது போல் பலப் பல விஞ்ஞான மாற்றங்கள் வந்து விட்டது..

நமது உணவு பழக்க வழக்கத்திலும் நிறைய மாறுதல்களை புகுத்திவிட்டோம்..

மேல் நாட்டு கலாச்சாரம் என்று நமது உணவு பழக்கத்தை மாற்றி, அதனால் நம் உடலில் ஏற்பட்ட நோயிகளைக் கண்டு பயந்து மீண்டும் நம் முன்னோர்களின் பாதையில் நாம் செல்ல முயற்சி செய்துகொண்டிருக்கும் காலமிது..

இன்றைய அவசர உலகத்தில் உணவை ருசிக்ககூட நமக்கு நேரம் இருப்பதில்லை.. நேரம் இருப்பதில்லை என்பதை விட நாம் நேரம் ஒதுக்கவதில்லை என்று சொன்னால் தான் அது பொருத்தமாக இருக்கும்..

உதாரணமாக நமது காலை உணவு.. சிலர் ஒரு கையை கைபெசிக்கும் மற்றொரு கையை உணவுதட்டிற்கும் என போராடிக் கொண்டிருப்பார்.. சில தாய்மார்கள் பள்ளி செல்லும் தங்கள் குழந்தையுடன் ஒரு குட்டி உலகப் போர் செய்தபடியே உணவு உண்பர்..

இந்த அவசரத்தால் தான்  வியாதிகள் கோந்து போல் நம்மை சுலபத்தில் ஒட்டிக்கொள்கிறது என நினைக்கிறேன்.. இந்த அவசரம் எதற்காக என்பது தான் எனக்குப் புரியாத ஒன்று..

ன்றளவில் பலர் உணவை, மதிப்பு இல்லாத ஒன்றாக மாற்றிக்கொண்டிருக்கிறோம் ..

நல்ல சாப்பாட்டை சாப்பிட செலவு செய்ய விரும்பாத பலர் தேவையிள்ளாதவற்றைச் சாப்பிட்டுவிட்டு மருத்துவமனைகளுக்கு பல ஆயிரங்களை அள்ளிக்கொட்டுகின்ற அவல நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம்..

பத்து ரூபாய் ஒரு கீரைக்கட்டு என்று விற்கும் ஒரு பாட்டியிடம் அதை எட்டு ரூபாய்க்கு பேரம் பேசும் நாம் பெரிய பெரிய மால்களில் சில நூறுகளில் விற்கும் குப்பைகளை நாகரீகம் என்ற பெயரில் வாங்கி உண்கிறோம்..

நகரப்புரங்கிளில் மட்டும் அல்ல இந்த நாகரீகம்.. கிராமப்புறங்களிலும் பரவிக் கிடக்கிறது என்பது தான் கசப்பான உண்மை..

யல்களிலும் காடுகளிலும் காலை முதல் மாலை வரை வேலைசெய்யும் மக்கள் உண்ணக்கூடிய உணவு வகைகள் மிகவும் எளிமையான ஒன்றாக இருக்கும்..

மேலும்  அவைகள் அனைத்தும் சுவையானதும் சத்தானதும் நன்றாக ருசிக்கக் கூடியதுமாகும்..

அவைகளை தினம் தினம் தொடர்ந்து அவர்கள் சாப்பிட்டு வந்தாலும் அவர்களுக்கு எந்தவித பாதிப்புகளோ வியாதிகளோ ஏற்ப்பட்டதில்லை.. வாரத்திற்கு இரண்டு மூன்று முறை அவர்கள் மருத்துவ வாசலை மிதித்ததும் இல்லை..

காலையிலேயே  விதம் விதமாக அரைகுறையாக சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்லும் நாமோ மாலையில் நேராக செல்வது மெடிக்கல் ஷாப்புக்கோ மருத்துவமனைக்கோ  தான்.. நாம் சாப்பிட்டது செரிமானம் ஆகியிருக்காதது தான் காரணம்..

சரி, இன்று நாம் ஒரு எளிமையான உணவான பழைய சோறு + பச்சை மிளகாய் / வெங்காயம் பற்றிப் பார்க்கலாம்..

பழைய சோறு + பச்சை மிளகாய் / வெங்காயம்

ன்னம்மா நீ..?? சாப்பாடு மிஞ்சிருச்சுன்னா தூக்கிப் போடவேண்டியது தானே..?? அது எதுக்கு தண்ணீர் ஊற்றி வெச்சிருக்கீங்க..??”,இக்காலத்து இளசுகள் கேட்கும் ஒரு பழம்பெரும் கேள்வி..

உலகில் மிகவும் சத்தான உணவு என்றால் அது பழைய சோறு என தனது சமீபத்திய ஆராய்ச்சியில் அறிவித்துள்ளது அமெரிக்கன் நூட்ரிஷன் அசோசியேஷன்..

நமது உணவுப் பழக்கங்களை ஆராய்ச்சி செய்த வெளிநாட்டவர்கள் உலகில் சிறந்த உணவு பழக்கம் தென் இந்தியாவின் உணவுப் பழக்கம் என அறிவித்துள்ளதை ஏற்றுக் கொள்ளும் நாம், பல நூறு வருடங்களாக மேலாக நம் முன்னோர்கள் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளாமலே சில பழக்க வழக்கங்களையும் உணவு முறைகளையும் பின்பற்றி வந்ததை ஏன் உதாசீனப் படுத்தினோம்..??

மது பாட்டி தாத்தா காலத்தில் எப்பொழுது கிடைக்கும் வித விதமான வெளிநாட்டு  காய்கறிகளெல்லாம் இருந்ததில்லை.. அவர்கள் அதனை பயிரிட்டதும் இல்லை..

சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய், பாகற்காய், சில காட்டு கீரைகள்.. இவைதான் அன்றைய டயட்.. அதுவும் மதியம் மட்டும் தான் காய்கறிகள்..

காலையில் தினமும் கண் விழித்தால் இக்கால இளைஞர்கள் முதல் அக்கால இளைஞர்கள் வரை கையில் தவழ்வது மணமணக்கும் காப்பியாக தான் இருக்கும்..

(இது உடலுக்கு நல்லதா கேட்டதா என்ற விவாதத்திற்கு பிறகு செல்லலாம்..)

சில வருடங்களுக்கு முன் நம் முன்னோர்கள் வழக்கமாக குடித்து வந்த நீச்சந்த்தண்ணீக்கு மாற்று தான் நாம் குடித்துக் கொண்டிருக்கும் காப்பி டீ எல்லாம்..

இந்த தண்ணீரில் இல்லாத சத்துக்களே இல்லை என்று நாம் கூறலாம்..

காலையில் பெரும்பாலான வீடுகளில் பழைய சாதமும் / நீச்சந்தண்ணீர் + வெங்காயம் தான்..

இந்த பழைய சாதத்தில் என்ன தான் அப்படி விசேஷம்..??

முதல் நாள் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு மறுநாள் நாம் சாப்பிடும் இந்த பழைய சாத்தில் தான் பி6, பி12 அதிகமாக இருக்கிறது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.