(Reading time: 7 - 14 minutes)

தொடர் - நலமறிய ஆவல்..!! - 11 - குழந்தைகளும், ஊட்டச்சத்து பானங்களும், பெற்றோர்கள் கவனத்திற்கு - வசுமதி

kid drinking milk

குழந்தை ஏன் இப்படி நோஞ்சானாக எலும்பும் தோலுமா இருக்கிறான்..??”,ஒல்லியாக இருக்கும் குழந்தைகளை பார்க்கிறவர்களெல்லாம் பொதுவாக கேட்கும் கேள்வி..

அதற்கு நாம்,”என்னன்னு தெரியலை எது கொடுத்தாலும் இது வேண்டாம் அது வேண்டாம் என்கிறான்..”,என்று பதில் சொன்னால் போதும்..

அடுத்து வருகிற பதில்,”ஏதாவது ஒரு ஹெல்த் ட்ரின்க் தர வேண்டியது தானே..??”,என்பதே பதிலாக வரும்..

நம் குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை.. அவன் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் முழுமையாக கிடைப்பதில்லை என்று நினைத்து ஏதாவது ஒரு பவுடரை பாலிலோ நீரிலோ கலந்து கொடுக்கிறோம்..

இது சரியா..?? தவறா..?? என்பதை பற்றி இன்று நாம் பார்க்கலாம்..

ஒரு குழந்தைக்கு நாம் முதன் முதலில் எப்பொழுது இந்த பானங்களை கொடுக்கத் தொடங்குகிறோம் தெரியுமா..??

பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைக்கு சில வாரங்கள் ஆனவுடனே பார்முலா மில்க் கொடுக்க தொடங்குகின்றனர்..

தாய்ப்பால் அல்லாமல் சர்க்கரை போன்ற பொருட்கள் கலக்கப்பட்ட பார்முலா பால் கொடுப்பது, சுவையூட்டப்பட்டுள்ள பேபி சீரியல் கொடுப்பது, இனிப்பான சத்து பானங்கள் கொடுப்பது என சிசுக்களுக்குக் கொடுப்பது அவர்களை சர்க்கரைக்கு அடிமையாக வைக்கிறது.. இந்த பானங்களில் 80 சதவீதம் சர்க்கரை மட்டுமே இருக்கிறது..

இதை பருகுவதன் மூலமாக குழந்தைகளின் உடல் எடை ஆரம்பத்தில் கூடுவது போலவும் அவர்கள் வளர்வது போலவும் தோன்றினாலும் அந்த வளர்ச்சி ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல..

ண்டனிலுள்ள இம்பீரியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ப்ரொபசர் நீனா மோடி (Neena Modi) என்பவரின் தலைமையில் ஊட்டச்சத்து பானங்களை 1288 இளைஞர்களுக்கும் 1258 குழந்தைகளுக்கும் கொடுத்து ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டனர்..

தொடர்ந்து நான்கு நாட்களாக அவர்களின் தினசரி உணவு பட்டியலை கண்காணித்து தகவல்களை சேகரித்தனர்..

வர்கள் செய்த இந்த ஸ்டடியில்

நான்கு வயதிலிருந்து பத்து வயதான குழந்தைகள் ஒரு நாளில் சராசரியாக 100 மிலி ஊட்டச்சத்து பானங்களை பருகுகின்றனர்.. இது குழந்தைகளுக்குத் தேவையான கலோரிகளைவிடக் கூடுதலாக 13 சதவிகிதம் கலோரிகள் உடலில் சேர்கின்றன.. இது குழந்தைகளுக்கு ஒரு நாளைக்குத் தேவையான சர்க்கரை அளவைப்போல் இரண்டு மடங்காகும்..

பதினொன்று முதல் பதினெட்டு வயதானவர்கள் ஒரு நாளைக்கு தேவையான சர்க்கரையை விட 15 சதவிகிதம் அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர்..

பத்தொன்பது முதல் அறுப்பத்தி நான்கு வயதுக்குட்பட்டோர்கள் உட்கொள்ளும் பானங்களில் ஒரு நாளைக்கு தேவையானதை விட 12 சதவிகிதம் அதிக சர்க்கரையை உட்கொள்கின்றனர்..

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒருவரும், 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் மூன்றில் ஒருவரும் உடல்பருமன் உள்ளவர்களாக இருக்கின்றனர் என்று அந்த ஆராய்ச்சியில் கண்டுகொண்டனர்..

தேவைக்கு அதிகமான உப்பு மற்றும் சர்க்கரையை அன்றாட உணவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று இந்த ஆராய்ச்சியின் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த பொது சுகாதாரத் துறையின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் அலிசன் டெட்ஸ்டோன் கூறியுள்ளார்..

அடிமையாக்கும் ஊட்டச்சத்து பானங்கள்

 ந்த ஊட்டச்சத்து பானங்களும் மதுவும் ஒன்றுதான்.. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை இது அடிமையாக்கிவிடும் என்கிறது அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன்..

 இந்தியாவில் அதிகமாக அருந்தப்படும் டாப் த்ரீ பிரபலான ஊட்டச்சத்து பானங்களில் மூலப்பொருட்களை எடுத்துக்கொள்வோம்..

 

மூலபொருட்கள் என ஸ்டிக்கரில் ஒட்டப்பட்டவை..

பானம் ஒன்று

மால்டட் பார்லி, பால் பவுடர், கோதுமை மாவு,மினரல்ஸ், ஐசலேட்ட் பரோட்டீன், எமுல்சிபையர், உப்பு, அசிடிட்டி ரெகுலேட்டர், வைட்டமின்கள்

பானம் இரண்டு

மால்டட் பார்லி, பால் பவுடர், சர்க்கரை, கோதுமை மாவு,மினரல்ஸ்,க்ளுகோஸ்,உப்பு, அசிடிட்டி ரெகுலேட்டர், வைட்டமின்கள், கோ கோ பவுடர், ஐசலேட்ட் ப்ரோட்டீன், ப்லேவரிங் சப்ஸ்டென்ஸ்..

பானம் மூன்று

மால்ட் எக்ஸ்ட்ராக்ட், சர்க்கரை, கோ கோ பவுடர், கேரமல், க்ளுகோஸ், பெர்மிடட் எமுல்சிபையர், வைட்டமின்கள், ஐசலேட்ட் மினரல்ஸ்,ரைசிங் ஏஜென்ட், உப்பு

 இந்த மூலப்போருட்களுள் முக்கால் சதவிதத்திற்கு மேல் குப்பைகள் தான்..

 உதாரணமாக,

  1. பால் பொவுடர் – இந்த ஊட்டச்சத்து பானத்தை நாம் பெரும்பாலும் பாலில் கலந்து தான் கொடுக்கிறோம்..பிறகு எதற்கு பால் பவுடர்..??
  2. ஐசலேட்ட் ப்ரோட்டீன், மினரல்ஸ், வைட்டமின்கள் - பெரும்பாலும் உடலை பருமன் ஆக்கக் கூடியவை.. அதனால் தான் இந்த பானத்தை உட்கொள்ளும் பொழுது குழந்தைகள் கொழு கொழுவென இருக்கின்றனர்..
  3. மீதமிருக்கும் அணைத்து பொருட்களும் சுவைக்கும், நிறத்திற்கும், அளவிற்கும் சேர்க்கபடுபவைகளே..

“ஊட்டச்சத்து பானங்கள் நம்மை அடிமை படுத்தி விடுகின்றன..காரணம்..அதில் நிறைந்திருக்கும் எமுல்சிபையர்..இது ஒரு வகையான அடிக்டீவ் சப்ஸ்டன்ஸ்..நிறைய குளிர் பானங்களில் இதை சேர்த்திருப்பார்கள்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.