(Reading time: 6 - 11 minutes)

தொடர் - நலமறிய ஆவல்..!! - 10 - வெள்ளை சர்க்கரை - வசுமதி

sugar

ரிசிக்கு அடுது நமது இல்லங்களில் அதிகமாக பயன்படுத்தும் உணவு பொருட்களுள் ஒன்று இந்த வெள்ளை சர்க்கரை..

சர்க்கரை இந்தியாவில் பரவிய காலக்கட்டத்தில் அதன் விலை கருப்பட்டியின் விலையைவிட அதிகம்.. சர்க்கரை ஒரு வீட்டின் பொருளாதார நிலையை குறிக்கும் பொருளாய் - a financial status 1950’களில் விளங்கியது.. கருப்பட்டியை ஒரு வீட்டில் உபயோகித்தால் அந்த வீட்டு மனிதர்களின் நிதி நிலை கீழ் (சில இடங்களில்) என்று பொருள் கொண்டனர் கருப்பட்டியின் மகிமை பற்றி அறியாது..

ரும்பு, தென்னை மற்றும் பணியிலிருந்து வெள்ளை சர்க்கரையை தயாரிக்கலாம்..  உலக சர்க்கரை வர்த்தகத்தில் பெரும்பகுதியாக கிடைப்பது கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரைதான்.. ஆகவே, இதை முதலில் கரும்பை பற்றி தெரிந்துகொள்வோம்..

சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது.. தென் ஆசியாவில் சூடான வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடிய கரும்பு வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு பயிர் செழித்து வளரக்கூடியது.. உலகெங்கும் 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 20 மில்லியன் ஹெக்டேர்களில் வானிகப் பயிராக கரும்பு பயிரிடப்படுகிறது..கரும்பு சுமார் 6 அடி முதல் 19 அடி உயரம் வரை வளரும்..

க்யூபா அதிக அளவில் கரும்பு பயிரிடுவதால், “உலகின் சர்க்கரை கிண்ணம்” என்று அழைக்கப்படுகிறது..

இந்தியாவில் கி.மு. 500 - ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சர்க்கரை தயாரிக்கும் முறை கி.மு.100 - ம் ஆண்டில் சீனாவுக்குப் பரவியது.. 'சர்க்கரை' என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் ‘சர்க்கரா’ என்ற சொல்லில் இருந்து வந்ததாகும்.. கி.பி. 636 –ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200 - க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது.. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது..

ரும்பபிலிருந்து கிடைக்கும் கரும்புச் சாற்றில் சுண்ணாம்பு, இரும்பு, மேக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், விட்டமின் பி 2, விட்டமின் பி 3, விட்டமின் பி 6, விட்டமின் பி 9 ஆகிய சத்துக்கள் நிரம்பி உள்ளது..

இதுவே வெள்ளை சர்க்கரையாக மாறிப் போனால் இந்த சத்துக்களின் அளவு..???

மது பத்தாம் வகுப்பு வேதியல் (கெமிஸ்ட்ரி) பாடப்புத்தகத்தின் கடைசி பாடத்தில் sugar manufacturing process என்ற ஒரு பகுதி இடம்பெற்றிருக்கும்.. அதை ஒருமுறை நாம் ரீவைன்ட் செய்து பார்ப்போமா..??

வயல்களில் விளையும் கரும்பு, சர்க்கரை ஆலைகளுக்குள் போய், சர்க்கரையாக மாறுவதற்கு முன் பல்வேறு கட்டங்களைக் கடக்க வேண்டும்..

முதலில், கரும்பில் இருந்து சாறு பிழியப்படுகிறது.. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும்போது, பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கல் திரவவத்தை (fluid) பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்..

பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் அமிலம் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது.. இந்த அமிலம் அழுக்கு நீக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது..

பின்னர் சுண்ணாம்பை 2 சதவிகித அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயுவை செலுத்துகிறார்கள்..

இதை 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது..

இதையடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு பெறப்படுகிறது..

காஸ்டிக் சோடா, சலவை சோடா சேர்த்து சுடுகலனில் அடர்த்தி மிகுந்த சாறு தயாரிக்கப்படுகிறது..

மீண்டும் சல்பர்-டை-ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க, ஸ்படிகநிலைக்கு (like mercury) சக்கரை வருகிறது.. மீண்டும் இந்த கலவையில் சல்பர்-டை-ஆக்சைடு சேர்க்கப்படுகிறது..

இந்த திரவம் சில நாட்களில் கெட்டியாகி வெள்ளை நிறமாகும்..இதனை பொடித்தால் வெள்ளை சர்க்கரை ரெடி..

வெள்ளை சர்க்கரை தேவையா நமக்கு..??

மது உடல் அதற்கு தேவைப்படும் சர்க்கரையை நாம் அன்றாடம் உண்ணும் உணவிலிருந்து (அரிசி, கிழங்கு, கீரை etc..) எடுத்துக்கொள்ளும்.. இதனால், தனியே வெள்ளைச் சர்க்கரை என்ற ஒன்று தேவையற்றது..

ஆனால் உண்மையில், இன்றைக்கு ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட நேரடியாகவோ, மறைமுகமாகவோ தினமும் 30 முதல் 40 கிராம் வரை வெள்ளைச் சர்க்கரையை உட்கொள்கிறோம்.. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.