(Reading time: 6 - 12 minutes)

தொடர் - நலமறிய ஆவல்..!! - 09 - கருப்பட்டி - வசுமதி

Palm tree

குட்டி எங்கடா இருக்க..??”,என்று நம் சுட்டிப் பென்னை தேடியபடி வந்தார் அவரது பாட்டி..

“பாட்டி இங்க பாருங்க..”,என்று பக்கத்துத் தோட்டத்திலிருந்து கைக்காட்டியது குழந்தை..

“அங்கே என்ன பண்ற..??”

“கருப்பட்டி செய்யறாங்க பாட்டி.. பாத்திட்டு இருக்கேன்..”

“சரி சரி.. நல்ல பிள்ளையா அவங்களை தொந்தரவவு பண்ணாம இருக்கனும்..”

“நீங்க வர்றி பண்ணாதீங்க..நான் குட் கேர்ள்..”,என்றவள் கருப்பட்டி செய்வதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்..

அந்தக் குட்டி வேடிக்கை பார்க்கட்டும்.. நாம் கருப்பட்டியைப் பற்றி பார்ப்போம்..

ருப்பட்டி பதநீரில் இருந்து செய்யப்படுவது.. கரிப்புதன்மை + இனிப்பு சுவை மிகுந்த கருப்பட்டி பெரும்பாலும் கிராமங்களில் தான் தயாரிக்கப் படுகிறது..பெரும்பாலும் இதனை பனை மரங்கள் நிரம்பிய இடங்களில் தான் தயாரிக்கப் படுகின்றன..

ஒரு பனை மரத்தில் நாள் ஒன்றுக்கு 6 லிட்டர் வரை பதநீர் கிடைக்கும்.. 18 லிட்டர் பனை பதநீரை காய்ச்சினால் தான் 10 கிலோ கருப்பட்டி வெல்லம் கிடைக்கும்..

பதநீரை காய்ச்சி தான் கருப்பட்டி செய்யப்படுகிறது என்பது நாம் அறிந்த உண்மையே.. ஆனால் பதநீர் காய்ச்சும் அடுப்பு எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ளலாமா..??

நின்று கொண்டு காய்ச்சும் வண்ணம் பதநீர் காய்ச்சும் அடுப்பு (கற்களால் அடுப்பு போல் அமைக்கபட்டிருக்கும் – கல் அடுப்பு, சில இடங்களில் சுண்ணாம்பு அடுப்பும் உபயோகிப்பார்கள்..) தரையில் சிறு பள்ளம் தோண்டி வைத்து இருப்பர், பள்ளத்தில் இருந்து ஒரு சுரங்கம் ஒன்று அமைத்திருப்பர் (சிம்னி அவுட் லெட் போல் – கொஞ்சம் ச்லாண்டிங்காக இருக்கும்) , இதன் மூலம் தான் விறகு, தேங்காய் மட்டைகள் மற்றும் பனைமர இலைகள் கொண்டு நெருப்பு மூட்டுவார்கள்..

முதலில் பதநீரை குடம் குடமாய் அள்ளி அதனை வடிகட்டி அடுப்பில் வைத்திருக்கும் ஒரு பெரிய வாணலியில் ஊத்துவார்கள்..

ஒரு பெரிய கரண்டி கொண்டு அந்த வாணலியில் கிண்ட, அந்த பதநீர் பிரவுன் நிறமாக மாறி பின்னர் கெட்டியாக (செமி சாலிடாகும்) ஆரம்பிக்கும்.. சரியான பதம் வந்தவுடன் அடுப்பை அனைத்திடுவார்கள்..

ரையில் தண்ணீர் தெளித்து, அதன் மீது இப்போது ஒரு பருத்தி துணியினை தண்ணீரில் பிழிந்து விரிப்பார்கள்.. பின்னர் வரிசையாக கொட்டாங்குச்சியை (தொட்டங்க்குச்சி) அடுக்கி வைப்பார்கள் (சில இடங்களில் மண் தரையிலேயே கொட்டாங்குச்சியை வைத்துவிடுவர்..) (கொட்டாங்குச்சிக்கு பதிலாக பல வடிவங்களில் அச்சுக்கள் வந்துவிட்டது.. இட்லி பாத்திரம் சதுரமா நீளமா இருந்தா எப்படி இருக்குமோ..அது போல்..)

காய்ச்சிய பதநீரை சிறிது ஆறவிட்டு இந்த கொட்டாங்குச்சிகளில் ஊற்றுவார்கள்.. (கலவையை அதிக நேரம் ஆறவிட்டால் கெட்டியாகி வாணலியில் பிடித்துக்கொள்ளும்..)

கொட்டாங்குச்சிகளில் / அச்சில் ஊற்றப்பட்ட பதநீரை சுமார் மூன்று மணி நேரம் வரை நிழலில் காய வைப்பார்கள்..

இந்த மூன்று மணிநேரத்தில் இந்த கலவை இறுகி கெட்டியாகிவிடும்.. காய்ந்த பின்னர் கொட்டாங்குச்சியை திருப்பி அதன் மூடியில் லேசாக தட்டினால் கருப்பட்டி ரெடி..

பதநீர் காய்ச்சும் பொழுது சிறிது காய்ந்த சுக்குப் பொடியை சேர்த்தால் அதனை சுக்குக் கருப்பட்டி என்கிறோம்..

தாத்தா.. நான் இன்னைக்கு ஊருக்கு போறேன் எனக்கு கொஞ்சமா இந்த ச்வீட் கொடுக்கறீங்களா..??”,என்று கருப்பட்டி செய்து கொண்டிருந்தவரிடம் கேட்டது குட்டி..

“அதுக்கென்னடா.. கொடுக்கறேன்..வாங்கிட்டுப் போ..”,என்றபடி ஒரு ஓலை பையில் கருப்பட்டியை வைத்துக் கொடுத்தார்..

“தாங்க்ஸ் தாத்தா..பை..”,என்றவள் திரும்பி,”ரீடர்ஸ் பை..பை.. ஐ ஆம் கோயிங்..சீ யூ சூன்..”,சிட்டாய் பறந்தது குட்டி..

கருப்பட்டியின் பயன்கள்..

புகையிலையை பதப்படுத்தி காய வைக்க பனைக் கருப்பட்டி அவசியம். மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்து தயாரிப்புக்காக அதிகளவில் கருப்பட்டி அனுப்பப்படுகிறது..

ருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்..கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும்.. மேனி பளபளப்பு பெறும்.. 

ருப்பட்டியும் உளுந்தும் (தோல் எடுக்காத உளுந்து என்றால் மிகவும் நல்லது) சேர்த்து செய்யும் உளுந்தங்களி செய்து உண்டுவந்தால் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். 

ரும்பு சர்க்கரைக்குப் (வயிட் சுகர்) பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்..

குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம்.. நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது.. 

சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.