(Reading time: 6 - 12 minutes)

கருப்பட்டி மிட்டாய்..

சீனி மிட்டாய் – கடந்த தலைமுறையின் சாக்லேட்.. ஆனால் இந்த சீனி மிட்டாயின் தந்தை யார் தெரியுமா..?? கருப்பட்டி மிட்டாய்.. தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மிட்டாய் வகைகளில் கருப்பட்டி மிட்டாயும் ஒன்று..

தென் மாவட்டங்களில் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளில் அதிகமாக இந்த கருப்பட்டி மிட்டாய் விற்கப்படுகிறது..

திருநெல்வேலி என்றால் அனைவருக்கும் அல்வாதான் நினைவுக்கு வரும், ஆனால் அதே போல் கருப்பட்டி மிட்டாயும் இங்கு பிரபலம் என்பது பலர் இன்னும் அறியாமலே உள்ளார்கள்..

சரி,இந்த கருப்பட்டி மிட்டாயின் செய்முறையை பார்ப்போம்..

தேவையான பொருள்கள்

இட்லி அரிசி - 1 கப்

உளுத்தம் பருப்பு - 1/4 கப்

எண்ணெய் - தேவையான அளவு

கருப்பட்டி - 2 கப்

செய்முறை

முதலில் இட்லி அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்..

பின் அதிலுள்ள நீரை முற்றிலும் நீக்கி விட்டு, அதை நன்கு மென்மையாகவும், கெட்டியாகவும் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்..

அரைத்த மாவை சேர்த்து 1/2 அல்லது 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்..

பின்னர் கருப்பட்டியை எடுத்து கொண்டு நன்கு தட்டி, ஒரு வாணலியில் போட்டு தண்ணீர் ஊற்றி, கருப்பட்டியை நன்கு கரைய வைக்க வேண்டும்.. கருப்பட்டி கரைந்ததும், அதனை இறக்கி ஓரளவு குளிர்ந்ததும், வடிகட்டி மீண்டும் வாணலியில் ஊற்றி 6-8 நிமிடம் சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்..

பின் வேறொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.. பின்பு தனியாக ஊற வைத்துள்ள மாவை ஒரு கெட்டியான முறுக்கு குழலில் போட்டு, எண்ணெய் சூடானதும், அதில் வட்ட வட்டமாக பிழிந்து விட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்க வேண்டும்..

இதனை கருப்பட்டி பாகுவில் போட்டு 2 நிமிடம் முன்னும், 2 நிமிடம் பின்னும் திருப்பிப் போட்டு ஊற வைத்து எடுக்க வேண்டும்.. இதேப் போல் அனைத்து மாவையும் செய்தால், சுவையான மற்றும் ஆரோக்கியமான ருசியான கருப்பட்டி மிட்டாய் ரெடி..

வணக்கம் நண்பர்களே..

இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்..

அடுத்த பதிவில் வெள்ளை சர்க்கரையைப் பற்றி பார்ப்போம்..

நன்றி..

நலமறிய ஆவல்...

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1112}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.