(Reading time: 7 - 14 minutes)

ட்டச்சத்து பானங்களை தொடர்ந்து உண்ணும் குழந்தைகளுக்கு உடல் பருமன், இதய நோய், டைப் 2 டயபெடிஸ், சில வகையான கான்சர்கள் வரை வர வாய்ப்புள்ளது..

குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து பானங்களையே நம்பி இருக்காமல் அவர்களின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பழங்கள், பச்சைக் காய்கறிகள், மீன், A2 பால், முட்டை, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்க்கலாமே..

மேலே கூறப்பட்ட உணவுகளை அவர்களோடு சேர்த்து வீட்டில் தயார் செய்யும் சத்துமாவை பிள்ளைகளுக்குக் கொடுக்கலாமே..??

வீட்டில் சத்து மாவு செய்வது எப்படி..??

வதானியங்கள் நிறைந்த சத்துமாவை வீட்டில் எளிமையாக தயாரிக்கலாம்..

தேவையான பொருட்கள்..

கம்பு, ராகி, கோதுமை, பச்சரிசி, உளுந்து, பாசிப்பயறு, கொள்ளு, வேர்க்கடலை,

பொட்டுக்கடலை,முந்திரி, பாதாம், மக்காச்சோளம், கொண்டக்கடலை – தலா 100 கிராம் 

ஏலக்காய் – 50 கிராம்

வெந்தயம் – 25 கிராம் (வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளலாம்)

செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தானியங்களையும் தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுக்கவும். பின்னர் ஒன்று சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்..

அரைத்து வைத்துள்ள மாவை சிறிது ஆறவிட்டு நன்கு சலித்துக் கொள்ளவும்.. பின்னர் காற்று செல்லாத பாட்டிலில் கொட்டி வைத்து தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தலாம்..

(இதனை சுடு தண்ணீரிலோ பாலிலோ சிறிது வெள்ளம் சேர்த்து பருகவும்..)

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை பருகலாம்..

இந்த வார ஸ்பெஷல்..

அரைவயிறு அன்னம் (திடப்பொருள்), கால் வயிறு நீர், கால் வயிறு காற்று காரணம் தெரியுமா..??

தை தெரிந்து கொள்ள நாம் நமது செரிமான அமைப்பைப் (Digestive system) பற்றி முக்கியமான சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்..

நாம் உண்ணும் உணவை மெல்வதை பொருத்து 20 % முதல் 25 % உணவு நமது புகுமுகத்திலேயே (வாயில்) செரித்துவிடும்..

உணவு வயிற்றை சென்றடைந்தவுடன் நொதித்தல் (Fermentation) பணியை நம் உடம்பு செய்யும்..

நொதித்தல் என்றால் என்ன..??

நொதித்தலை நான் ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்க நினைக்கிறேன்..

நமது வீட்டில் தோசை மாவை ஆட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றுகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.. (இதில் மாவு என்பது நம் புகுமுகத்தில் நாம் மென்ற உணவு.. பாத்திரம் நமது வயிறு..)

மாவை பாத்திரத்தில் ஊர்ரும்பொழுது வழிய வழிய ஊற்றாமல் பாதியே நிருப்புவோம்.. அரை பாத்திரம் நிரப்பினால் மாவு நொதித்து முக்கால் பாத்திரம் நிரம்பிவிடும்..அதுவே வழிய வழிய நிரப்பினால் பொங்கிவிடும்..

இதே செயல் தான் நம் வயிற்றிலும் நடக்கும்.. அரைவயிறு உண்டோமானால் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் நாம் உண்ட உணவு நொதித்து முக்கால் வயிறு நிறைந்து விடும்.. முழு வயிறு உண்டால் தொண்டை வரை உண்டது போல் தோன்றும்..

நொதிக்கும் சமயத்தில் நம் வயிற்றில் சுரக்கும் அமிலதைத் தான் கால் வயிறு நீர் என்கிறோம்..

கால் வயிறு வெற்றிடமானது நமது வயிற்றில் அமைந்திருக்கும் சிறு துகள்களின் மூலம் நாம் உண்ட உணவிலிருக்கும் சத்துக்களை உறிஞ்ச வழிவகுத்துக் கொடுக்கும்..

வயிற்றில் நொதித்தல் நடைபெறுவதால் தான் ஒரு உணவிற்கும் மற்றொரு உணவிற்கும் மூன்றிலிருந்து நான்கு மணி நேர இடைவேளை அவசியமாகிறது.. நொதித்தல் நடக்கும் பொழுது நாம் சிற்றுண்டிகளை உண்டோமானால் நொதித்தல் தடைப்பட்டு செரிமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்..

இதற்காகத் தான் அரைவயிறு அன்னம் (திடப்பொருள்), கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்கிறார்கள்..

நலமறிய ஆவல்...

Episode # 10

Episode # 12

{kunena_discuss:1112}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.