(Reading time: 7 - 14 minutes)

பாலாசனம்: 

Balasana

குழந்தையின் போஸ் என்று மிகவும் பொருத்தமாக அழைக்கப்படும் இது, ஒரு பெரிய அழுத்தம் எரிப்பான் ஆகிறது. அது மெதுவாக இடுப்பு, தொடைகள், கணுக்கால்களை நீட்டிப்பதுடன் மனதில் அமைதி, மற்றும் மன அழுத்தம் மற்றும் சோர்வு விடுவிக்க உதவும். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதின் மூலம் ஏற்படும் கீழ் முதுகு வலிக்கு சிறந்த தீர்வாகும்.

உங்கள் முழங்கால்களில் எடையை வைத்துக் கொண்டு தரையில் உட்காரவும்.

இப்போது தரையில் உங்கள் கால்களை தரைமட்டமாக்க வைத்து மற்றும் உங்கள் குதிகால் மீது உட்காரவும்..

உங்கள் தொடைகளை சிறிது விரித்து வைக்கவும்.

மூச்சை வெளியே விட்டு உங்க்ள் இடுப்பிலிருந்து முன் நோக்கி வளையவும். உங்கள் தொடைகளில் உங்கள் வயிற்றை ஓய்வெடுக்க விட்டு உங்கள் முதுகை நீட்டிக்கவும்.

உங்கள் முதுகை நீளச் செய்ய உங்கள் கைகளை முன்னால் நீட்டவும்.

உங்கள் உச்சஞ்தலையையும் தரையில் தொடும் படி வைக்கலாம்.

இதற்கு உடல் நெகிழ்வு தேவையாதலால், உங்கள் உடலை அனுமதிக்கும் அளவிற்கு மேல் தள்ளாதீர்கள், கால்ப் போக்கில் இது சரியாகி விடும்.

இது ஒரு ஓய்வெடுக்கும் போஸ் எனவே நீங்கள் ஆசாதாரண வேகத்தில் மூச்சு விட வேண்டும். நீங்கள்   மூன்று நிமிடங்கள் மற்றும் சிறிய ஐந்து எண்ணிக்கை வரை இந்த போஸில் தங்க முடியும்.

குறிப்பு: நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்ல்து, முழங்கால் காயம் அல்லது வயிற்றுப்போக்கு  இருந்தாலோ இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டாம்.

 

விபரீத காரணி யோகா :

viparita-karani

முதலில் சுவருக்கு எதிராக படுத்துக் கொள்ளுங்கள். ஆழ்ந்த மூச்சினை நன்றாக இழுத்து, விட வேண்டும்.

பின் இரு கால்களையும் தூக்கி, சுவற்றில் மேல் ஒட்டியபடி வையுங்கள்.

நேராக நெட்டுக் குத்தலாக உங்கள் கால்கள் சுவற்றில் இருக்கும்படி, உங்கள் பொஸிஷன் இருக்க வேண்டும்.

தலையையும் உடலையும் நேராக வைத்துக் கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே இருக்க வேண்டும்.

பிறகு மெதுவாக கால்களை தாழ்த்தி பழைய நிலைக்கு வாருங்கள்.

உங்களுக்கு முதுகு மற்றும் இடுப்பு வலி இருந்தால், இடுப்பிற்கு, மிருதுவான தலையணை அல்லது துணியினை முட்டுக் கொடுக்கலாம்.

பலன்கள் :

கால்களை மேலே தூக்கி செய்யப்படும் இந்த யோகாவில், வயிற்றுப் பகுதிகளில் உள்ள உறுப்புகள் நன்றாக செயல்படும்.

பசியினை தூண்டும்.

ரத்தத்தின் அடர்த்தி குறையும். ரத்த சம்பந்தமான நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

மன அமைதியை தரும்.

அர்த்த மச்ச இந்திராசனா

ArdhaMatsyendrasana

ர்த்த என்றால் பாதி மச்ச என்றால் மீன், இந்திரா என்றால் உணர்வு.

பாதியாய் உடலை வளைத்து செய்யப்படும் இந்த ஆசனத்தால் மார்புக்கூடு நன்றாக விரிவடைந்து காற்றை நுரையீரலுக்கு அனுப்புகிறது. அதிக ரத்த ஓட்டம் பாய்ந்து பாதிப்பினை சரி செய்கிறது.

விரிப்பில் கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். மெதுவாக இடது காலை மடக்கி, இடது பாதத்தின் மீது அமரவேண்டும். அதாவது புட்டத்தை இடது பாதத்தின் மீது வையுங்கள்.

பின்னர் வலது காலை படத்தில் காட்டியது போல், இடது தொடையை தாண்டி வைக்கவும். இப்போது இடது கையினால் வலது பாதத்தை பிடித்தபடி வலப்பக்கம் திரும்புங்கள். வலது கையை பின்பக்கமாய் கொண்டு வந்து இடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த நிலையில் 1 நிமிடம் வரை இருக்க வேண்டும். மெதுவாய் ஆழ்ந்து மூச்சை விடுங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரவும்.

இப்போது இதே போன்று வலக் காலிலும் செய்ய வேண்டும். இவ்வாறு 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.

முதுகுத் தண்டு பாதிப்படைந்தவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

பலன்கள் : 

சுவாசம் நன்றாக இருக்கும். இடுப்பிற்கும், முதுகிற்கும் நெகிழ்வுத் தன்மையை தரும். கல்லீரல், சிறு நீரகத்தை செயல் புரிய வைக்கும். நுரையீரலை ஆரோக்கியப்படுத்தும். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.