(Reading time: 7 - 14 minutes)

தலைவலியை போக்கும் யோகாசனம்

headache

முன்பெல்லாம் என்றோ ஒரு நாள், எப்போதோ ஒரு சில மணி நேரங்கள் வந்து போகும் என்று இருந்த தலைவலி இப்போதெல்லாம் பலருடைய வாழ்வில் என்றென்றும் தோன்றும் அங்கமாகி விட்டது.

இது போன்ற தொல்லை தரும் தலைவலியில் இருந்து தப்ப யோகாசனம் ஒரு நல்ல வழி.

தொடர்ந்து யோகாசனம் செய்வது உடலுக்கும், மனதிற்கும் மிகவும் நல்லது.

தலைவலியை வராமல் தடுக்கும் சில யோகாசனங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.

குறிப்பு: உங்களுக்கு யோகாசனம் செய்து பழக்கம் இல்லையென்றால் ஒரு யோகா பயிற்சியாளரின் துணையுடன் இவற்றை செய்வது நல்லது.

மார்யாரியாசனா

Marjaryasana

மார்யாரி ஆசனத்திற்கு இன்னொரு பெயரும் உண்டு. பூனை ஆசனம். பூனை போன்ற நிலையில் இந்த ஆசனத்தை செய்வதால் இத்ற்கு பூனை ஆசனம் என்றும் பெயர்.

முதலில் கால்களை மடக்கி, முட்டி போட்டு, பாதத்தின் மீது அமருங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்து பின் விடவும்.

இப்போது மேலே படத்தில் காட்டியதை போல் குனிந்து கைகளை தரையில் ஊன்றுங்கள். மெல்ல முதுகை உட்பக்கமாக வளைத்து, தலையை மேலே தூக்குங்கள்.

தலை மேலே தூக்கும்போது, முதுகு உட்பக்கமாக வளைந்துதான் இருக்க வேண்டும்.

சில நொடிகளுக்கு பின், தலையை குனியுங்கள். இப்போது முதுகை லேசாக தூக்க வேண்டும். பாதங்கள் முழுவதும் தரையோடு தரையாக இருக்க வேண்டும். உள்பாதம் மேலே பார்த்தபடி இருக்க வேண்டும். பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு வாருங்கள். மூச்சை ஆழ்ந்து இழுத்து, விடுங்கள். இந்த ஆசனத்தை இது போல், பத்து முறை செய்யுங்கள்.

பலன்கள் :

ஸ்பான்டிலைட்டிஸ், நாள்பட்ட முதுவலி, இடுப்பு வலி, மற்றும் முதுகில் டிஸ்க் பிரச்சனைகள் உள்ளவர்கள், இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்தால், உங்கள் பிரச்சனைகள் குணமாகிவிடும்.

 

கருடாசனம்

Garudasana

விரிப்பில் நேராக நிற்க வேண்டும் 

இரண்டு கைகளையும் உடம்பிற்கு பக்கவாட்டில், நேராக நீட்ட வேண்டும்

பார்வையை ஒரே இடத்தில் நிலைநிறுத்த வேண்டும்

பின் உடலையும், மனதையும் ஒருங்கிணைத்து, வலது காலை உயர்த்தி, இடது கணுக்காலை பின்னிக் கொள்ள வேண்டும்

அதன் பின், வலது கை மேலாக, இடது கை கீழாக பின்னிக் கொள்ள வேண்டும்

மெதுவாக மூச்சு இழுத்து விட வேண்டும்

சில வினாடிகள் கழித்து, கைகளை விலக்கி, பின் கால்களை விலக்கி, சாதாரண நிலைக்கு வர வேண்டும்

அடுத்து, கால்களை மாற்றி செய்ய வேண்டும்.

குறிப்பு

ஆசனம் முடியும் வரை பார்வையை திருப்பாமல், ஒரே இடத்தில் நிலைநிறுத்த வேண்டும். பலவீனமான மூட்டு மற்றும் மூட்டு வலி உடையோர், இந்த ஆசனத்தை, யோகா ஆசிரியரின் ஆலோசனையின்படி செய்ய வேண்டும்.

பலன்கள்

உடம்பையும், மனதையும் பலப்படுத்துகிறது

மூட்டுவாதம், விரைவீக்கம் போன்றவற்றுக்கு, நல்ல பலனை கொடுக்கிறது

ஞாபக சக்திக்கு நல்ல ஆசனம் நரம்பு மண்டலம் பலப்படும்அதிகப்படியான தொடை சதை குறையும்

 

பட்சி மோத்தாசனம்:

Paschimottanasana

தரையில் விரிப்பை விரித்து அமர்ந்து கால்களை நேராக நீட்ட வேண்டும்.

பின், மூச்சை இழுத்துக் கொண்டே இரண்டு கைகளையும் தலைக்கு மேல் காதுகளை ஒட்டி நீட்டி மூச்சை வெளியிட்டபடி கால் கட்டை விரல்களை, கை விரல்களால் பற்றி முழங்கால்களுக்கு இடையே முகத்தை ஒட்டி வைக்க வேண்டும்.

10 முதல் 20 வினாடி ஆசன நிலையில் இருக்க வேண்டும்.

பலன்கள்

உடம்பையும், மனதையும் பலப்படுத்துகிறது

மூட்டுவாதம், விரைவீக்கம் போன்றவற்றுக்கு, நல்ல பலனை கொடுக்கிறது

ஞாபக சக்திக்கு நல்ல ஆசனம் நரம்பு மண்டலம் பலப்படும்அதிகப்படியான தொடை சதை குறையும்

வயிற்றுப் பகுதி தசைகள் பலம் பெறவும், மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்பு, வயிறு, தலை வலிகளை இந்த ஆசனம் குறைக்கும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.