(Reading time: 7 - 14 minutes)

 ஜனு சிராசனம்

Janusirsasana

 இவ்வாசனத்தில் இறுதி நிலையில் சிரசால் முழங்காலைத் தொடுவதால் இப்பெயர் உண்டாயிற்று.

ஜனு - முழங்கால். சிரசு -தலை

விரிப்பில் கால்களை நீட்டி உட்கார வேண்டும்.

வல்க்கால் நீட்டி சுமார் 3அடிஅகலம் அகன்று உட்காரவும்.

இடதுக்காலை இழுத்து மடித்து பாதத்தின் உள்பாகம் வழக்கால் தொடையில் ஒட்டும் படி கால் கவட்டையிலிருந்து வைக்கவும்.

வலக் காலின் பாதத்தைக் கைவிரல்களால் எட்டிக் கோர்த்துப் பிடிக்கவும். முழங்காலை நோக்கி முகத்தைத் தாழ்த்தி வலது பக்க முழங்கால் மேல் தொட வேண்டும்.

மடித்த இடக்காலைத் தரையில் வைக்கவும் , வலது பக்க முழங்காலை மடிக்கக்கூடாது.

பலன்கள்:

வயிற்றுத் தசைகள் கெட்டியாகும்.

வயிற்று உள்ளுறுப்புகள் தூண்டப் பெற்று நன்கு செயல்படும்.

மலச்சிக்கல் நீங்கும்.

 

சவாசனம்

savasana

மல்லாந்து படுக்கவும், கைகள் உடலை விட்டுச் சிறிது தள்ளியிருக்க, உள்ளங்கை மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும். பாதங்களை வேண்டுமளவு பிரித்து வைத்து தலை எந்தப்பக்கமும் சாயாமல் நேராக வைத்து சாதாரணமாக சுவாசத்தை கண்களை மூடிக்கொண்டு செய்ய வேண்டும்.

இந்த நிலையில் நேரத்திற்கு ஏற்றவாறு ஒருநிமிடம் அல்லது இரண்டு நிமிடமிருக்கவும்.

 

பலன்கள்:

மனதின் இறுக்கமும், அழுத்தமும் சமன் செய்யப்படுகின்றன.

எல்லாத் தசைகளும், மூட்டுகளும் தளர்த்தப்படுகின்றன.

அதிக இரத்த அழுத்தம், மனதாலேற்படும் மனநோய்ப் பிரச்சினைகளை வெகுவாகக் குறைக்கிறது.

பொதுவாக உடல்நலனை அதிகரிக்கச் செய்கிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.