(Reading time: 2 - 4 minutes)

பொது - பணம் பணம் - ஜான்சி

flyingMoney

ணம் பணம் என மனிதாபிமானம் என்ற ஒன்றைக் கூட இல்லாமல் செய்து விட்டு, நீதி நேர்மை எல்லாவற்றையும் மூட்டைக் கட்டி விட்டு அலையும் சாதாரண மக்களளிலிருந்து, அரசியல் வியாதிகள், வியாபாரிகள் எல்லோரையும் குறித்து சிந்தித்த போது இந்த படம் ஞாபகம் வந்தது.

ரொம்ப சின்ன வயசில டி வி யில் பார்த்த ஒரு கருப்பு வெள்ளைப் படம் அது. கதை என்று குறிப்பாய் நிறைய ஞாபகத்தில் இல்லை.

ஆனால், சில காட்சிகள் குறிப்பாக நிறைவுறும் காட்சி மனதில் பதிந்து விட்டது.

கதா நாயகி ஊரையே அடித்து உலையில் போடும் குடும்பத்தில் வாழ்க்கைப் படுகிறாள். அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை.

அந்த செல்வ நிலையை அவளும் அனுபவிக்கிறாள். ( அந்த பழைய படத்திலும் ரொம்பவே நளினமாக இருந்ததாக ஞாபகம்)

அந்த படத்தில் நம்ம எம் ஆர் ராதா சார் மாதிரியே நக்கலாய் கருத்தைச் சொல்லும் ஒரு கதாபாத்திரம் உண்டு.

இறுதி காட்சியில் கதா நாயகன் நாயகி கூடவே அந்த நக்கல் கதாபாத்திரமும் ஒன்றும் இல்லாத பாலைவனத்தில் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.

தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை. உணவில்லை. 

அந்த நக்கல் நபர் நாயகியிடம் கேட்கிறான்.

பசிக்கிறதா? ஏன் உன் விலை உயர்ந்த காலணியை சாப்பிட வேண்டியது தானே என ஹா ஹா வென சிரிக்கிறான்.

இதோ உன்னிடம் இவ்வளவு ரூபாய் இருக்கிறதே இதை சாப்பிட வேண்டியதுதானே என வாயில் திணிக்கிறான்.

பையில் கத்தை கத்தையாக இருக்கும் பணத்தை எடுத்து விசிறியடிக்கிறான். அது அர்த்தமற்ற வெற்றுக் காகிதமாகி பாலைவனமெங்கும் பறக்கிறது.

படம் நிறைவுறுகின்றது.

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.