(Reading time: 4 - 8 minutes)

பொது - நகைச்சுவை கட்டுரை: நேர்காணல் - ரவை

" ணக்கம் கணேசா! உனது பிறந்தநாளன்று வாழ்த்து தெரிவிக்கிறேன்......"

" மிக்க நன்றி, நிருபரே! உமக்கு என் ஆசிகள்!"

" ஆசிகள் என்னென்ன எனக் கூறமுடியுமா?"

" நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி, புகழ், திறமை, அதிகாரம், வேறென்ன வேண்டுமோ, கேள்! தருகிறேன்........"

" அதெப்படி, கணேசா! அடுக்கடுக்காக ஆசிகள் தருவதுபோல் ஒரு பிரமையை ஏற்படுத்திவிட்டு, அரசியல்வாதியைப்போல தரவேண்டியதை மறைத்துவிட்டாய்?"

" அப்படியா? தெரியாமற் செய்த பிழையை மன்னித்து, அதை நீயே சொல், தருகிறேன்!"

" உனக்குத் தெரியும் நான் உன்னிடம் தினமும் என்ன வேண்டுகிறேன்னு......."

"ஓ! அதுவா? நீ தொலைத்ததை,தவறான இடத்தில் தேடுகிறாய்...."

" நான் தொலைத்தது தவறுதான், அதை மன்னித்து நீ உதவக்கூடாதா?"

" அதைத்தான் சொல்கிறேன், தவறான இடத்தில் தேடுகிறாய் என்று........இரு மனைவியுடைய என் தம்பியிடம் கேட்கவேண்டியதை, இன்னமும் எனக்கேற்றவளை தேடிக்கொண்டிருக்கிற , கட்டை பிரம்மசாரியான என்னிடம் கேட்கலாமா?"

" உன் தம்பி முருகனின் திருமணத்துக்கு மட்டும் உதவினாயே, அதைப்போல எனக்கும் ..........."

" நிருபர் என்பதை நிரூபித்துவிட்டாய்! என்னையே மடக்கி கேள்வி கேட்கிறாய், பலே!"

" பாராட்டுவதின்மூலம் தப்பிக்கலாம் என மனக்கோட்டை கட்டாதே! இன்றைக்கு இரண்டில் ஒன்று தெரியாமல் இங்கிருந்து நகரமாட்டேன்......"

" தர்ணாவா? உண்ணாவிரதமா? நீ பட்டினி கிடப்பதில் ஆட்சேபணையில்லை, என்னை பட்டினி போடாதே, கொழுக்கட்டைக்காக காத்திருக்கிறேன்........"

" கணேசா! காலம் காலமாக இந்த கொழுக்கட்டையையே உண்கிறாயே, அலுக்கவில்லே? வேறு ஏதேதோ சுவையாக.....பீட்சா, பரோட்டா குர்மா, அல்வா, பால்கோவான்னு நிறைய வந்திருக்கிறதே........."

" நிருபரே! உமக்கு எது ரொம்ப பிடிக்குமோ, அதையாவது கொடும், பசிக்கிறது, நேற்று முழுவதும் முழுப் பட்டினி! ஒரு பக்தனும் எனக்கு நைவேதனம் எதுவும் செய்யவில்லை, என்ன காரணமோ தெரியவில்லை....."

" அதுவா? அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கவேண்டுமென, நாடு முழுவதும் உண்ணாநோன்பு இருந்தார்கள்....."

" ஏகாதசியன்று இருப்பது போலவா?"

" ஆமாம், கணேசா! ஏகாதசியன்று பக்தர்கள் ஏன் உபவாசமாக, பட்டினியாக இருக்கிறார்கள்?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.