(Reading time: 4 - 8 minutes)

நம்மை பிணைத்துக்கொண்டு, உண்மையான நமக்கே விரோதமாக செயல்படும்போது, விளைவுகள் பெரிய 'நானை' பாதிக்காது, அது பாதிப்புக்கு அப்பாற்பட்டது, ஆனால் சின்ன 'நானை' குழப்பிவிடும். வருத்தம், சோகம், கோபத்தில் தள்ளிவிடும்.

 குழந்தை, தனது பொம்மைக்கு கை, கால் உடைந்துவிட்டதே என அழுவதுபோல!

 இவையனைத்தும் நம்பும்படியாக இல்லையா? சரி, விடுங்கள்!

 ஒரு நிகழ்ச்சி எந்த இடத்தில், எப்போது, எதற்காக, எவரால், ஏன் என்ற விவரங்களை நம்மால் உறுதியாகச் சொல்லமுடியுமா?

 அப்படி சொல்லமுடியாமைக்கு காரணம், அவைகளை நிகழ்த்துபவனின் எண்ணங்கள் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது!

 நம்மை அந்த சக்தி, நாடக மேடையில் நடிகர்களை டைரக்டர் தனது ஆளுமையின்கீழ் வைத்திருப்பது போல, பூமியில் நாம் எதை, எப்போது, எதற்காக, ஏன் செய்யவேண்டும் என்பதை அவன் தீர்மானிக்கிறான்.

 நமக்கு சிந்திக்கவேண்டிய அவசியமே கிடையாது. அந்த சக்தி, நமக்குள் இருந்து நம்மை இயக்குகிறது.

 சிறுவர்கள், வானில் காற்றாடியை பறக்கவிடுவது போல, அந்த சக்தி தன் கையில் சூத்திரக் கயிற்றை வைத்துக்கொண்டு நம்மை ஆட்டிவைக்கிறது.

 வானில் பறக்கிற பட்டத்துக்கு தான் சுதந்திரமாக இயங்குவதுபோல ஒரு பொய்யான தோற்றத்தை கொடுத்துவிட்டு, உண்மையில் தரையிலுள்ள சிறுவன் தன் கையிலுள்ள கயிற்றின்மூலம் பட்டத்தை இயக்குவது போல, அந்த சக்தி இயக்குகிறது.

 நமக்கொரு பொறுப்போ, கடமையோ, உரிமையோ, உறவோ, சுமையோ, கிடையாது.

 வானில் வெறுமையை காற்றை சூரியனை சந்திரனை நட்சத்திரங்களை மேகங்களை எந்தவித சிந்தனையுமின்றி பார்த்து மகிழ்வோம்!

 செடியிலுள்ள மலர்ந்த ரோஜாவை, எந்தவித சிந்தனையுமின்றி, சில வினாடிகள் அதன் அழகுக்காக மட்டுமே பாருங்கள்! அந்தக் கணத்தில் உங்களுக்கு நீங்கள் உண்மையில் யார் என்பது புரிந்துவிடும்.

 இதைப் படித்துவிட்டு உடனே ஓடிப்போய், பார்த்தால், உங்கள் சிந்தனையில் படித்தது இருந்துகொண்டே இருப்பதால், பலன் கிடைக்காது.

 முதலில், சிந்தனைகளே இல்லாமல், வெறுமையான மனதுடன், இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

 அது சுலபமல்ல; அதற்கு அடிப்படையாக 'நான்' என்பது உங்கள் உடலோ, மனமோ, எண்ணங்களோ, உடையோ எதுவுமில்லை, அவைகளுக்கு அப்பாற்பட்டது என்னும் சத்தியத்தை நம்புங்கள்!

நேரம் கழிவது தெரியாமல், கனவுகள் காணாமல், ஆழ்ந்த உறக்கத்தில் நீங்கள் இருக்கும்போது, உங்களுக்குள் இயங்குகிறதே, அதுதான் உங்களுடைய உண்மையான 'நான்'!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.