(Reading time: 4 - 7 minutes)

பொது - ....மிடி பயங் கொல்லுவார்! - ரவை

கொரோனா நோய் உலகமுழுவதும் பரவுகிற வேகத்தைவிட, அதிவேகமாய் அதைப்பற்றிய பீதியும் செய்தியும் பரவுகிறது!

 எல்லா நாடுகளின் அரசும் மக்களிடையே நிலவுகிற இந்த பீதியை அகற்ற, தாங்கள் எடுத்துவருகிற நடவடிக்கைகளை விவரமாக பத்திரிகைகள் வாயிலாகவும் ஊடகங்கள் மூலமாகவும் விளம்பரப் படுத்துவது, இந்த பீதியை இன்னும் பலமடங்கு அதிகரிக்கிறதே தவிர, போக்கவில்லை!

 1.விமான நிலயங்களிலும், ரயில் நிலயங்களிலும், இருபத்துநான்கு மணி நேரமும் டாக்டர்கள் பயணிகளை பரிசோதித்து அனுமதிக்கிறார்கள்.

2.பள்ளிகள், கல்லூரிகள், மூடப்படுகின்றன. தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகின்றன. ஒரு மாணவனின் பெற்றோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வதந்தி வந்ததும், அந்தக் கல்லூரி மூடப்பட்டது.

3.பெரிய பெரிய அடுக்குமாடி வீடுகளில் உள்ளவர்கள், குவாரன்டைன் செய்யப்பட்டு வெளியே வரமுடியாமல், தடுக்கப்படுகிறார்கள்.

4.அலுவலகங்களும் உணவு விடுதிகளும் மூடப்படுகின்றன.

5.முக கவசங்கள் எல்லாம் விற்றுப்போய், அவைகளை மக்கள் வாங்கமுடியாமல் திண்டாடுகின்றனர்.

6.மருத்துவ மனைகளில் டாக்டர்கள், நர்ஸ்கள், இதர சிப்பந்திகள் இருபத்துநான்கு மணி நேரமும் கட்டாயமாக பணியாற்ற ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

 7.இப்படி ஏழை தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் தினக்கூலியாக பணியாற்றுபவர்கள், தொழிற்சாலையோ, பொதுப்பணிகளோ, மூடப்படுவதின் விளைவாக வருமானமின்றி பசியில் வாடுகின்றனர்.

8.கடைகள் மூடப்பட்டு, உணவுப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்காமல், திண்டாடுகிறார்கள்.

9.விமான சேவையும் தனியார் பஸ்களும் பயணிகள் வராத காரணத்தால், நஷ்டத்தில் தடுமாறுகின்றன. அவைகளில் பணியாற்றுவோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இப்படிப்பட்ட சூழ்நிலையில் பொதுமக்கள் எப்படி இந்தப் பயத்திலிருந்து விடுபடுவது, என்று பார்ப்போமா?

 முதலில் உலக மக்கட்தொகையில் முதலாவதாக இருக்கிற மக்கட் சீனாவில்தான், இந்த நோய் துவங்கியது.

 நூற்றுமுப்பது கோடி மக்களில் அதிக பட்சமாக ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், இன்னமும் மீதி உள்ள கோடிக்கணக்கில் உள்ள மக்கள் வேறெங்கும் வெளியேற வழியின்றி, அந்த நாட்டில்தானே வாழ்கிறார்கள். பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான நிலைப்பாடே தவிர, நாட்டைவிட்டு எங்கும் ஓடிப்போகாமல் அங்கேயேதான் வாழ்ந்து வருகிறார்கள்.

 அன்றாட அலுவல்கள், சற்று பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான், எனினும் முற்றிலுமாக நிறுத்தப்படவில்லை.

 உலக நாடுகள் அனைத்திலுமே பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறதேதவிர, எல்லா செயல்களும் நிறுத்தப்பட்டு, முற்றிலும் ஸ்தம்பித்துவிடவில்லை!

 தவிர, யோசித்துப் பார்த்தால், இந்தமாதிரி புதிய நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவதும், பிறகு அதற்கு மருந்தும் சிகிச்சையும் கண்டுபிடிக்கப்பட்டு, தொடர்ந்து உலகம் இயங்கிக் கொண்டுதான் உள்ளது.

 நாற்பது ஐம்பது ஆண்டுகள் முன்பு வந்த ப்ளூவில் தொடங்கி, சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வேறு ஒரு புதியநோயில் பாதிக்கப்படுவதும் நடந்துகொண்டுதான் உள்ளது.

 அந்த வரிசையில்தான் இன்று, கொரோனா! பயப்படத் தேவையில்லை!

 எச்சரிக்கையுடன் இருப்போம். தடுப்புவழிகளை அனுசரிப்போம். தேவையற்ற நடமாட்டங்களை, கூட்டம் கூடுவதை, கேளிக்கைகளை தவிர்ப்போம்!

 பள்ளிகள், கல்லூரிகள் எவ்வளவு காலத்துக்கு மூடியிருக்க முடியும்? தேர்வுகளை தள்ளிவைத்துக்கொண்டே இருக்க முடியுமா?

 அவசியமான பயணங்களை தவிர்க்க முடியுமா? பசி, பட்டினியில் சாகமுடியுமா?

 மகாகவி இதைத்தான் சொல்லியிருப்பானோ?

"பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்-மிடி

பயங் கொல்லுவார்-துயர்

பகை வெல்லுவார்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.