(Reading time: 3 - 6 minutes)

Inspire Me - ஜெயஸ்ரீ உள்ளால் - இந்தியாவின் பணக்கார பெண்களில் ஒருவர் - யார் இவர்?

சென்ற வாரம் வெளியான டாப் 10 இந்தியப் பணக்கார பெண்களில் ஒருவராக ஜெயஸ்ரீ உள்ளாலும் இருந்தார்.

இவரைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது.

  

ஒரு சாதாரண பெண்ணாக இருந்து இன்று உலகப் பிரசித்திப் பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் “உலக அளவில் தங்கள் சுய முயற்சியால் முன்னேறிய பணக்கார பெண்கள் 2020 பட்டியலில்” (Self-Made Women: 2020) 16வது இடத்தைப் பெற்றிருக்கிறார் ஜெயஸ்ரீ.

இவருடைய மொத்த சொத்து மதிப்பு தோராயமாக ரூபாய் 8110 கோடி (1.1 பில்லியன் அமெரிக்க டாலர்)

  

யார் இந்த ஜெயஸ்ரீ?

தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்!

 

1961ல் பிறந்த ஜெயஸ்ரீ அந்தக் காலக்கட்டத்தில் பெண்களுக்கு பொருத்தமில்லை என பலரும் நினைத்த அறிவியல், கணித பாடங்களை விரும்பினார்.

 

அவருடைய விருப்பம் அன்றையக் கால விதிமுறைகளுக்கு எதிராக இருந்தது. ஆனாலும் ஜெயஸ்ரீ தன் ஆர்வத்தை குறைத்துக் கொள்ளவில்லை.

 

அவருடைய தந்தைக்கு அமரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்தப் போது அங்கே பொறியாளாராக படிப்பது என்று ஜெயஸ்ரீ முடிவு செய்தார். அதைப்போலவே படித்து பொறியாளராக வேலை செய்யவும் தொடங்கினார்.

  

ஆனால் நான் பொறியாளர் இந்த வேலையை மட்டும் தான் செய்வேன் என்று ஒரு கட்டுக்குள் தன்னை வைத்துக் கொள்ளாமல், மீண்டும் தன் விருப்பம் என்ன என்ற சுய பரிசோதனை செய்துக் கொண்டார் ஜெயஸ்ரீ.

  

தான் ஒரு நல்ல பொறியியாளராக இருந்தாலும் தன்னுடைய உண்மையான திறமை அது அல்ல என்பதை கண்டுக் கொண்டார். தன்னுடைய தனித் திறமை தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுக்கு சென்று சேர்ப்பதில் இருப்பதை உணர்ந்தார்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.