(Reading time: 2 - 4 minutes)

போட்டோகிராபர் போல மொபைல் கேமராவில் அழகான படங்கள் க்ளிக் செய்ய சில ஈஸி டிப்ஸ்

Camera

ன்றைய காலக் கட்டத்தில் நம்முடனே இருக்கும் மொபைல் நம் அனைவரையுமே போட்டோகிராபர் ஆக மாற்றி விட்டது.

அப்படி போட்டோ எடுக்கும் போது ப்ரோபஷ்னல் போட்டோகிராபர் போல தெளிவான, அழகான படங்களாக க்ளிக் செய்ய உங்களுக்காக சில டிப்ஸ்.

1. இரவு நேரத்தில் போட்டோ எடுக்கும் போது ஃபிளாஷ் பயன்படுத்தாதீர்கள்.

து நம்மில் பலரும் செய்யும் ஒரு தவறு.

அப்படி ஃபிளாஷ் வைத்து எடுக்கும் போட்டோக்கள் இயல்பான படங்களாக தெரியாது, செயற்கையாக தோன்றும்.

இயன்ற அளவில் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஸ்ட்ரீட் லைட், லைட் போன்றவற்றின் ஒளியை பயன்படுத்தி க்ளிக் செய்வது தான் சிறந்தது.

 

2. HDR படங்கள்

ங்கள் கேமராவில் HDR எனப்படும் "High dynamic range " செட்டிங் இருந்தால் தவறாமல் அதை பயன்படுத்துங்கள்.

HDR படங்கள் அழகான வண்ணமயமான படங்களை க்ளிக் செய்ய உதவும்.

ஐபோன், ஆண்ட்ராயிட் போன்களில் எல்லாம் இந்த செட்டிங் இருக்கிறது.

 

3. ஜும் பயன்படுத்துவதை தவிருங்கள்

Zoom பயன்படுத்தி எடுக்கப் படும் படங்கள் தெளிவில்லாமல் இருக்கும்.

எனவே ஜும் செய்வதற்கு பதில் அருகே சென்று போட்டோ க்ளிக் செய்து விட்டு, தேவைக்கு ஏற்ப crop செய்துக் கொள்ளுங்கள்.

 

4. இடது பக்கம்...

யாரை க்ளிக் செய்கிறோமோ அவரை மைய பகுதியில் (center ) கொண்டு வந்து க்ளிக் நம் பழக்கம்.

ஆனால் அதை விட அவரை சற்றே இடது பக்கம் இருப்பதாக க்ளிக் செய்தால் உங்கள் படம் இன்னும் அழகாக இருக்கும்.

இதை போட்டோகிராபர்கள் "Rule of thirds " என்று அழைக்கிறார்கள்.

உங்கள் கேமராவில் கிரிட் லைன்ஸ் (grid lines ) தெரியுமாறு வைத்தால் இதை செய்வது எளிதாக இருக்கும்.

ஐபோன், ஆண்ட்ராயிட் போன்களில் எல்லாம் இந்த செட்டிங் இருக்கிறது.

 

5. கீழிருந்து படம் எடுப்பதை தவிருங்கள்

கீழிருந்து படம் எடுத்தால் படத்தில் கூடுதல் நிழல் பட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் குழந்தைகள் அல்லது சிறிய பொருட்களை க்ளிக் செய்யும் பொது அவர்கள் அளவிற்கே சென்று க்ளிக் செய்வது தான் சிறந்தது.

 

டுத்த முறை க்ளிக் செய்யும் பொது இந்த டிப்ஸ் பயன்படுத்தி பாருங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.